பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தெருவில் நமக்குக் கண்முன் காணப் பெறுவன 2500 அல் லது 3000 ஆண்டுகள் எல்லையில் அமைவனவேயாயினும் அவற்றின் தெளிவும் செம்மையும் காணின் அவை அதற்குமுன் எத்தனை எத்தனையோ ஆயிரமாயிரமாண்டு கள் தம் வாழ்வின் பயணத்தை-செலவினைக் கழித்திருக்க வேண்டும் என்பது புலகுைம். எனவே. இந்த இலக்கியப் பயணம் நெடுந்தொலைவு நடைபெற்ற ஒன்று. எனினும் நம் கண்முன் தெரியும் எல்லையில் நின்று அந்த நெடுஞ் சாலையை நோக்கிேைல நமக்குப் பல உண்மைகள் புலகுைம். தொல்காப்பியத்தின் செய்யுளியலிலும் பிற இயல்களி லும் தமிழில் தோன்றி வாழ்ந்த பாக்கள் - இலக்கியங்கள் பற்றிப் பலவாக விளக்கப் பெய்றிருந்தும், அவற்றில் காட்டப்பெறும் அனைத்தையும் இன்று நாம் பெற்றிருக்க வில்லை என்பது தெளிவாகின்றது. எனவே, இலக்கியங் கள் ஒருசிலவற்றைக்கொண்டே, அவற்றின் வளர்ச்சியை யும் செலவையும் அறிந்து கொள்ள இயலும். கடைச்சங்க காலத்துக்கு முன் எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி வாழ்ந்தன, பல கடலூழிகளாலும், பிறவற்றலும் அவை அனைத்தும் நிலைகெட, ஒரிரு பாடல்கள் வாழ்ந்து வந்தன. அவையும் பின் தோன்றிய கடைச்சங்கப் பாடல்களோடு ஒன்றிக் கலந்து, எட்டுத் தொகையில் சேர்த்து எண்ணப் பெறுகின்றன. இந்த எட்டுத்தொகைப் பாடல்கள் அமையு முன் தமிழ் இலக்கிய நெடுந்தெருவில் ஒரு திருப்பம் உண் டாகியிருக்கவேண்டும்.இலக்கியநெடுந்தேர்-நேராகச்செல் லாது, திருப்பத்தின் வழிச் செல்ல வேண்டுமாயின், அதைத் திருப்பவும் செம்மையாகச் செலுத்தவும் வல்ல திறனுளர் தேவையன் ருே? ஆம்! தேவையான அவ்வக் காலத்தில் திறன் நிறை செம்மை சால் புலவர்கள் தோன்றி, இந்தத் தமிழ் இலக்கியத் தேரினைக் காலமறிந்து இடமறிந்து செவ் வியுடன் செய்வினையின் மூலமறிந்து, திருப்பிச் செம்மை. யாகச் செல்ல வழி கண்டுள்ளனர். அவர்தம் திறமைச் செயல் வழியும் தெளிந்த உள்ளத்தின் வழியும் உருவான இலக்கியங்களே நம்மை வாழ்விக்கின்றன.