பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 'கொடுங்கோல் உண்டுகால் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்" -சிலம்பு. -23/111-112 என்று பேசியதறிவோம், எனவே, அரசாட்சி செய்வோர் யாருக்கும் எந்த வகையிலும் எவ்வகைத் துன்பமும் உண் டாகாமல் பார்த்துக் கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்பதைச் சாத்தனரும் அவரைப் போன்ற பெரும் புல வர்களும் வற்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். ஈண்டு, "மாநிலங் காவல வைான் மன்னுயிர் காக்குங் காலத் தானதனுக் கிடையூறு தன்னல்தான் பரிசனத்தநல் ஊனமிலாப் பகைத் திறத்தால் கள்வரால் உயிர்தன்ல்ை ஆனபகை ஐந்தும் தீர்த்து அறங்காப்பா னல்லனே" மனுநீதி. 36 என்று அமைச்சராக இருந்த சேக்கிழார், அரசு எந்த வகையிலும் தன் கீழ் உள்ள எந்த உயிர்க்கும் ஊறு நேரா மல் பார்த்துக் கொள்ளக் கடமைப்பட்டது என வற்புறுத் துவதையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். காட்டிய மன்னர் சாத்தனர் இத்தகைய நல்லாட்சியைக் காட்டுமுகத் தான் தம் காப்பியத்தில் பல மன்னர்களை நமக்கு அறிமு கப் படுத்தி வைக்கிருர். அவர்தம் பெயர்களையெல்லாம் வரிசைப்படுத்தித் தம் மணிமேகலையின் முன்னுரையில் ஐயர் அவர்கள் காட்டியுள்ளார்கள். அவருள் நேரடியா கத் தொடர்பு கொள்ளும் அரசர் சிலர்; சிலர் பாத்திரங் களாய்-கதை வழியாகவும் கருத்து வழியாகவும் அறிமு கப்படுத்தப் பெறுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இக்கதையில் வரும் பாத்திரங்களின் பிறப்பைப்பற்றி மட்டுமன்றி, பிறநாடுகளிலும் பிற பிறவிகளிலும் தொடர் புடைய அரசர்களையெல்லாம் காட்டுகிறர் சாத்தனர். அவ ருள் பாரத, இராமாயண காலத்து மன்னர்களாகிய இராமன், விராடன், விசயன் போன்றரும் இடம்பெறுகின்