பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 களையும் சாத்தனர் குறிக்கின்றர். இவற்றுள் இரத்தின தீவகமும் இலங்கா தீவகமும் ஒன்றேயாகும். மகா தீவு நான்கனுள் ஒன்று நம் சம்பூத் தீவகம் என அறிகிருேம். மற்றவை பற்றித் திட்டமான விளக்கம் இல்லை. எனினும் இக்காலத்திய கண்டங்களை ஒத்து அவை இருந்திருக்க லாம் எனக் கொள்ள இடமுண்டு. இப்பெருந் தீவுகளாகிய கண்டங்கள் நான்கினைச் சார்ந்து, ஒவ்வொன்றிற்கும் ஐந் நூறு வீதம் இரண்டாயிரம் சிறு தீவுகள் இருந்தன என ஐயர் அவர்கள் தம் குறிப்புரையில் காட்டுகிருர். இப் பெருந் தீவுகளும் சிறு தீவுகளும் ஆகிய அமைப்புக்களை யும் அவற்றுள் வாழ்வார் உருவங்களையும் தெய்வங்களை யும் அப்படியே காட்டுவது போல் மயமல்ை செய்யப் பெற்ற ஒரு பெருங்கோட்டமே பூம்புகாரிலிருந்த சக்கர வாளக் கோட்டம் எனக் காட்டுகிருர் சாத்தனர். எனவே பூம்புகாரில் இந்தப் பரந்த உலகில் உள்ள அத்தனைச் சிறப்புக்களையும் அத்தனை நாடுகளில் உள்ள மக்கள் வாழ்க்கை முறையினையும் பிறவற்றையும் வைத்து, நிலை பெற்ற ஓர் உலகக் கண்காட்சிச் சந்தை எனவே அக் கோட்டத்தை உண்டாக்கிப் போற்றிக் காத்தனர் அக் காலத்திய தமிழ்மக்கள் என்ற பேருண்மையை இதன் வழியே உணர்த்திட வைக்கிரு.ர். - நான் முதலில் மேலே காட்டிய நல்ல புலவர்களுக்கு 'உலகமே முன்னிற்கும் என்ற முறையில் உலகம்’ என்ற தொடராலேயே தம் நூலைத் தொடங்கிய சாத்தனர், பூம் புகாரில் இவ்வுலகத்தை மாதிரிப் பொருளாக அமைத்துக் காட்டி, ஆண்டாண்டுள்ள மக்கள் வாழ்க்கை முறையைப் புலப்படுத்தி உலகம் ஒன்றிவாழ வேண்டும் என்ற உணர்வை உண்டாக்குகிறர். இவ்வுலக நாடுகளையும் அதில் வாழும் நம்மையும் மக்கட் சமுதாயத்தையும் பிணிக்கும் பெருநூலாகத் தம் மணிமேகலையை உரு வாக்குகிறர். 1. ஐயர் பதிப்பு பக். 83.