பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொழிவு--- (31-1-1972) இலக்கிய மரபும்-சமய நெறியும் வாழும் இலக்கியம் மக்களிடையே என்றும்வாழும் இலக்கியம் பாடும் புல வர்கள் தம்மை மறந்தவராவர்.'தன்னை மறந்தாள் தன்நாமம் கொட்டாள்'என்று சமய நெறிக்குக் காட்டிய அப்பர் அருள் வழி இலக்கிய வழிக்கும் பொருந்தும், அவ்வாறு தம்மை மறந்து தம் இயற்பெயர் கெட்டு நின்ற இலக்கியப் புலவர் தம் பெருநூல்களே இன்று நம்மிடை வாழ்கின்றன. தொல் காப்பியர்,நக்கீரர்,இளங்கோ, கம்பர், சேக்கிழார் புகழேந்தி பாரதியார் உள்ளிட்ட அனைவரும் தம் இயற் பெயரின லன்றியே வாழ் ந் து, தம் இலக்கியத்தையும் கா ல ங் கடந்து வாழ வைக்கின்றனர். சாத்தனரும் அந்த வரிசை யில் வைத்து எண்ணத்தக்கவரே. அவர் பெயர் சமயஞ் சார்ந்த சிறப்புப் பெயராக சாஸ்தா என்றதன் சிதைவாக அமைந்த பெயராகச் சொல்வது பொருந்துவதாகும். இவ்வாறு தம்மை மறந்த புலவர்கள் முன் நிற்பது உலகே யாகும். உலக வாழ்வே தம் வாழ்வாகக் கொண் டனர் இப்புலவர். தாமின் புறுவது உல கின்புறக் காணும்' உத்தமர் வரிசையில் உள்ளவர்கள் இவர்கள். எனவேதாம் இவர்தம் இலக்கியத்துக்கு எடுப்பாக- முதலாவதாக உலகம் இடம்பெறுகின்றது. தொல்காப்பியர்தம் பாயிரத் தின் தமிழ் கூறு நல் உலகும். குலப்பெயர் கொண்ட நக்கீரர்தம் உலகம் உவப்ப என்பதும், சேக்கிழாரின்'உல கெலாம் என்பதும், இளங்கோவடிகளின் உலகத்தின் முதலாகிய ஞாயிறு திங்கள் 'மாமழை ஆகியவையும்