பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத் திருப்பங்கள் எட்டுத் தொகையாகிய சங்க நூல்களுள் பரிபாடல், கலித்தொகை என்பன தவிர்த்துப் பிற தொகை நூல்கள் அனைத்தும் அகவற்பாவால் சிறுசிறு அளவில் அமை கின்றன. தனி மனிதனைப் பாராட்டும் பாடல்கள் அவற் றுள் உண்டெனினும், அத் தனி மனிதனை ஒரு பெரும் வழிகாட்டியாகவோ-உலகோர் போற்றும் தெய்வமா கவோ அவை புகழவில்லை. மாருகப் புகழும் இகழ்ச்சியும் நீர்வழிப் படுஉம் புணைபோல் அமைவன என்ற உணர் வில் தேவையானவற்றை மட்டுமே சுட்டிக் காட்டிச் செல்லுகின்றன. அவன் இழைக்கும் தவறுகளைச்சுட்டிக் காட்டித் திருத்த முயன்றுள்ளன; நல்லது செய்தால் பாராட்டியுள்ளன; அவ்வளவே! அப்பாடல்களின் எல்லை நூறு அடிகளுக்குள் அமைகின்றது. - இத் தொகை நூல்களுக்குப் பிறகு தமிழ் இலக்கிய நெடுந்தேர் மற்ருெரு தெருவுக்குத் திரும்புகின்றது. அத் திருப்பத்தைத் திறம்படச் செய்கின்ற புலவர் நக்கீரராவர். இத்தகைய திருப்பங்களில் செல்வதற்கு மன உரமும் எதிர்ப்பினைத் தாங்கும் திறனும் தேவை. இயல்பாகச் செல்லுகின்ற நெறிவிட்டு வேற்று நெறியில் திரும்பின் உலகம் இன்றும் ஏற்றுக்கொள்வதில்லையே. சாதாரண எளிய வாழ்க்கை நெறியிலேயும் இந்த வரலாற்று உண் மையைக் காண முடிகின்றது. எனவே, இலக்கிய நெறி யில் இத்தகைய திருப்பங்களை அறிஞர் உலகம் உடனே ஏற்றுக் கொள்ளாது; மேலும் அத்தகைய புது நெறிகளைத் தகைந்து தடுக்கவும் கூடும். அவற்றையெல்லாம் கடந்து சமுதாய வாழ்வு ஒன்றையே உளத்தில் அமைத்து முன்னேற்றம் காண விரும்பும் புலவனே அந்த முட்டுக் கட்டைகளையெல்லாம் திறம்படக் கடந்து, இலக்கியத் தேரினைச் செம்மையாகத் திருப்பிச் செலுத்த முடியும். நாம் காணும் நெடு வழியின் முதல் திருப்பத்தினை நக்கீரர் திறம் படத் திருப்பிச் செல்கிருர். அவர் நீண்ட பாடலை, ஒரு தலைவனை முன்னிறுத்தி, அவன் புகழ்பாடி, கற்பனையும்