பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பாவை நோற்றமை பின்னல் வந்த ஆண்டாள் தாம் நோற்ற பாவை நோன்பின் திறத்தினைப் பாடுங்கால் அப் பாவையால் பெறும் உலக இன்பினைச் சுட்டுகிறர். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் கம்பாவைக்குச் சாற்றி நீராடில்ை தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெருஞ் செந்நெல் ஊடுகய லுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பப் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடநிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரொம்பாவாய்" என்று பாடி உலகம் பசி நீங்கப்பெற்றுச் சிறக்கவைக்கும் பாவைத் திறத்தைக் காட்டுகிருர். இது உலகியலை ஒட்டி மேற்கொண்ட பாவை நோன்பாகும். மணிமேகலை துறவியலை ஒட்டி நோன்பினை மேற்கொண்டாலும், அத் துறவும் உலகியல் வாழ்க்கையின் செம்மைக்கே பயன்படு கிறது எனக் காட்டும் வகையில் நோற்கின்றர். துறவற வாழ்வு சுயநலத்தால் அமைந்த ஒன்றன்று என்பதைச் சாத்தனர் மணிமேகலை வாழ்வால் சுட்டிக்காட்டித் துறவி உலக வாழ்விற்காக வாழக் கடமைப்பட்டவன் என்பதை வற்புறுத்துகிருர். அதேைலயே உலகம் வாழ உணவளிக் கும் இல்லற நெறிச் செயலை மணிமேகலை மேலாக்கி அவளிடம் வற்ருத அமுதசுரபியைக் கொடுத்து வையத் தைப் பசி நீக்கம் செய்ததோடு, அவள் நோன்பினையும் உலகம் பவத்திறம் அறுவதற்கெனவே பயன்படுத்து கிருர். இத்தகைய பெருநெறியே சாத்தனரையும் அவர் நூலையும் - மணிமேகலையாம் துறவுக் கன்னியையும் வைய முள்ளளவும் வாழ வைக்கின்றது. இயற்கை வளம் சாத்தனர் இயற்கை வளத்தைப் பாடும் திறன் பெற்ற வர். துறவுநூல் ஒன்றனைச் சுவையுடன் கொண்டு செல்