பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 அடுத்த இலங்கைக்குச் சீதை எடுத்துச் செல்லப்படுவதை எண்ணுகிறர். இராமன் வாயால் அவளைப் புகழவைத்து, இயற்கை வளங்கள் அத்தனையையும் முப்பத்தாறு பாடல் களால் விளக்கிக் காட்டுகிருர். ஒருசில காண்போம். மேலே கண்ட சாத்தனர் தம் அடிகளுடன், "இழைந்த நூலிணை மணிக்குடம் சுமக்கின்ற தென்ன குழைந்த நுண்ணிடைக் விவியிளவன முலைக்கொம்பே! தழைந்த சந்தனச் சோலைதன் செலவினைத் தடுப்ப நுழைந்து போகின்ற மதிஇருல் ஒப்பது நோக்காய்' -சித்திர, 9 "ஆடுகின்ற மாமயிலினும் அழகிய மயிலே! கூடுகின்றிலர் கொடிச்சியர் தம்மனம் கொதிப்ப ஊடுகின்றனர் கொழுநருக் குருகினர் உவக்கப் பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய்' -சித்திர. 12 'கினைந்த போதிலும் அமிழ்தொக்கும் நேரிழை! கிறைதேன் வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்தொறும் - தொகுத்துக் குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்தஇன் குறிஞ்சி கனிந்த பாடல்கேட் டசுணமா வளர்வன காணுய்!” -சித்திர. 24 "ஐவனக்குரல் ஏனலின் கதிர் இறுங் கவரை மெய்வணக்குறு வேயினம் ஈன்ற மெல்லரிசி பொய்வணக்கிய மாதவர் புரைதொறும் புகுந்துன் கைவணத்த வாய்க்கிள்ளை தந்தளிப்பன காணுய்' - -சித்திர. 34 என்ற கம்பனின் வண்ணப் பாடல்களை ஒத்துநோக்கின் உண்மை புலப்படுமன்ருே? இவ்வாறு சாத்தனருக்குப் பின்வந்த புலவர் பல்லோர் இவர்தம் புலமையால் பொலிவு பெற்றுத் தத்தம் இலக்கியங்களுக்கு எழிலூட்டுகின்றனர்.