பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கலந்து, வரம்வேண்டிப் பயன்பெறும் வகையில் பாடி முடிக்கின் ருர். அவர் வழியே புலவர் பலர் பாடுகிறர்கள். நூறு அடி எல்லையினும் நீண்ட பாடல் வரிசை ஏழுநூற்று எண்பத்திரண்டு அடி வரையில் நீண்டது. இவற்றுள் பொருளியலும் புகழ்ச்சியும் போற்றலும் அதிகமாக இடம் பெற்றன; இயற்கைப் புனைவு, கற்பனைத் திறன் கலந்த பாடல்களாக இவை அமைந்தன. நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்கத் தொகைப் பாடல்களுக்கும் பத்துப் பாட் டுக்கும் உள்ள வேற்றுமை தெள்ளத் தெளிவாக விளங்கு கின்றது. எனினும் அப்பாடல்களைப் பாடித் திருப்பத்தைச் செம்மையாகச் செய்த புலவர்களின் திறத்தால் அவை வாழ்கின்றன. தமிழ் இலக்கியமும் அத் திருப்பங்கடந்து வீறு நடையிட்டு விரைகின்றது. இந்தத் திருப்பத்திலிருந்து நெடுந்தொலைவு செல்வதற். குள்ளாகவே தமிழ் இலக்கிய நெடுவழியில் மற்ருெரு திருப்பம் குறுக்கிடுகிறது. ஆனால் இத் திருப்பத்தில் செல்லுவதற்கு யாவரும் அஞ்சி ஒதுங்கினர். ஒரு சிறந்த புலவரும் ஒர் அரசகுமாராகிய அடிகளுமே துணிந்து அத்திருப்பத்தில் கால் வைத்தனர். ஆயினும் அவர்கள் எண்ணி எண்ணி, யார் முன்செல்வது யார் பின்பற்றுவது என்று ஆராய்ந்து, ஒருவரும் முன் செல்ல விரும்பாமை யால் இருவரும் கையிணைந்து ஒன்றியே அத்திருப்பத்தில் கால்வைத்தனர். அத் திருப்பத்தில் இருந்த முட்டுக் கட்டைகளை இருவருமே அகற்றினர். நல்ல வேளை அவர் கள் திருப்பிய திருப்பம் நீண்டு நெடுங்காலம் தமிழ்ச் சமுதாயத்தினிடை அமைய, இலக்கிய நெடுந்தேர் ஒடிக் கொண்டிருக்க வாய்ப்பாக அமைந்தது. யாவர் அந்த இருவர்? ஆம்! இளங்கோவடிகளும் சாத்தனருமே ஆவர். நாட்டு நிலை நாட்டு நிகழ்ச்சிகளையும் அவற்றிற் குரியவர்களையும் வைத்துச் சில அடிகளால் நடந்தவற்றைக் காட்டி,