பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அழைக்க, மாதவி மறுத்துக் கூறவும் வயந்தமாலை வருத்தத் துடன் திரும்பியதை நல்ல உவமை முகத்தான் விளக்கு கிருர். நல்ல மணியினைக் கடலிடைப் போட்டு வீழ்த்தினர் பெற்ற வருத்தம் உவமையாகக் காட்டப் பெறுகிறது. ஆம்! உலகில் உயர்ந்து நின்று பலரும் காணச் சிறக்கவேண்டிய பெறுதற்கரிய மணி, கடலுள் யாருக்கும் பயனற்றுத் தன் அழகிழந்து காணுது வீழ்ந்து மறைந்தமை போன்று, எளிமையில் பெறமுடியாத மாதவியும் மணிமேகலையும் நிலைகெடுவதை-தம் அழகழிய நிற்பதை எண்ணிய சாத் தனர் இரக்க முற்ருே அன்றி ஏனே, ‘அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று' 2172–73. எனக் காட்டுகின் ருர். அடுத்து மற்ருெரு உவமை நெஞ்சைத் தொடுகின்றது. மணிமேகலை மலர்தொடுத்துக் கொண்டிருக்கிருள். அது போதுதான் மாதவி, கோவலனைப் பிரிந்து தான்பெற்ற துன்பத்தைக் கூறி வயந்தமாலையிடம் இந்திர விழாவுக்கு வர மறுக்கிருள். அத்துன்பத்தை நினைத்த மணிமேகலைக் குக் கண்ணிர் மிகுகின்றது. அது எல்லைகடந்து மணி மேகஜலயே இறைவனுக்குக் கட்டிய மலர்மாலையில் பட்டு மாசுபடுத்துகின்றது. மணிமேகலையை முதல்முதல் நமக்கு இங்கேதான் சாத்தனர் அறிமுகப்படுத்துகிருர், முதல் அறி முகம் அழுகையோடே தொடங்குகின்றது. ஆம்! உலக மக்கள் துன்பம் துடைக்க, மற்றவர்களுக்காக அழும் அழு கையும் அதல்ை பெருகும் கண்ணிருமே உலகத் துன்பத் தைத் துடைக்க உதவுவன. பின் உலகத்தின் அழுகை யையே துடைக்க வருகின்றவளை அழுகையோடே முதன் முதல் அறிமுகப்படுத்துகிருர் அந்த அழுகையும் அவளைப் பற்றியதாக அமையாது, "தந்தையும் தாயும் தாம் நனி உழந்த வெந்துயர் வழியே அமைகின்றது.