பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119. இந்த அழுநிலையைக் கண்ட தாய் மாதவி பொருளாய் அவள் கண்ணில் வடிந்த நீரைத் தன் கையால் துடைக் கி ைருள். இங்கே தான் சாத்தனர் அழகான நல்ல உவமை யைக் கையாளுகின்றர். மணிமேகலையின் முகத்தைச் சாத்தனர் நமக்கு முதன்முதல் தண்மதியெனக் காட்டு கின் ருர். ஆம்! அவள் அழும்போதும் அதன் தன்மையும் தண்மையும் மாரு நிலையையும் அவ் வுவமை வழியே அவர் உணர்த்தி விட்டார். மாதவியின் கை தாமரையாகம் பொலிகின்றது. தாமரை தண்மதியைச் சேர்ந்தது போன்று. மணிமேகலையின் முகத்தில் மாதவி காமர் செங்கை பொருந்தி அவள் கண்ணிரை மாற்றிற்று என்கின்றர். மாதவி மணிமேகலை முகம் நோக்கி தாமரை தண்மதி சேர்ந்தது போல காமர் செங்கையின் கண்ணிர் மாற்றி" –3/11-13 என்பது சாத்தனர் வாக்கு. ஆம்! அவள் அழுகையை மாற்றி, உலகோர் அழுகையை மாற்ற வித்திட்டுவிட்டார் சாத்தனர். மணிமேகலை சோலைக்குச் சென்றுள்ளாள் என்பதைக் கேட்டறிந்த உதயகுமரன் விரைந்து தேர் ஏறி அச்சோலைக் குள் செல்கின்றன். அரசகுமரனுகிய அவன் தேர் பொன்ன லும், மணியாலும் அழகுபடுத்தப் பெற்றது போலும், எனவே அதற்குச் சந்திரனை உவமை காட்டுகிருர். அவன் புகும் சோலையோ வளர்ந்து கருமைநிறம் உற்றுச் செழித் துள்ளது. அதை மேகத்துக்கு உவமை சொல்லுகிருர். இவன் தேரில் விரைந்து செல்லுங்காலை இவன் விரைவுக் கிடையில் தன் வேகத்தை உணராது, சோலை விரைந்து தன்னிடம் வருவதாக நினைக்கின்றன் போலும். அல்லது காண்போர்க்கு அத்தகைய தோற்றம் அளித்திருக்கலாம். விரைந்து ஒடுகின்ற மேகத்திடை சந்திரன் புகுவதாயினும் காண்போர்க்குச் சந்திரனே விரைந்து மேகத்துள் புகுவ தாகத் தான் காட்சி தருகின்ந்து. விரைந்தோடும் உலகத் துள்ளோர், தம் சுழற்சியை அறியாது ஞாயிறு சுழல்வது