பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 சுரபியையும் காணுகிருர். தாயிடம் பால் இருக்குமிடம் தெரியவில்லை யாயினும் குழந்தையை நினைந்ததும்-கண் டதும் அப் பால் சுரப்பது போன்று, அமுதசுரபியிடத்தே உணவற்றும் அயர்வோரைக் கண்டதும் உணவு சுரக்கும் நிலையை எண்ணுகிறர். நாவலந் தீவாகிய நம் நாட்டில் பஞ்சம் உண்டானமையின், பலர் உணவின்றி வருந்து கின்றமையின் அமுதசுரபி வழி அவர்களுக்கு உணவளிக் கத் தாயுள்ளம் கொண்ட மணிமேகலை நினைக்கிருள். அனைத்தையும் இணைத்துச் சாத்தனர் அழகாகப் பாடு கின்ருர். "புறங்கடை கின்று புன்கண் கூர்ந்துமுன் அறங்கடை கில்லா தயர்வேtர் பலரால் ஈன்ற குழவி முகங்கண் டிரங்கி தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே நெஞ்சுவ்ழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்" -11/112-118 என மணிமேகலையின் தாயுள்ளத்தைப் பேச வைக்கிருர். மணிமேகலைக்கும் மேலாகச் சாத்தனர் தம் காவியத் தில் ஒரு பாத்திரத்தைப் படைத்துள்ளார். அவர்தாம் ஆதிரை நல்லாள் ஆவர். அம் மங்கை நல்லாள் சோறு இட்டால்தான் அமுதசுரபி எடுக்க எடுக்கக் குறையா வளம்பெறும் எனக் காட்டுகிருர் சாத்தனர். அவளை அறி முகப்படுத்தும் போதே இலக்குமியையும் அவள் தங்கிய தாமரையினையும் நினைக்கிருர். "குளனணி தாமரைக் கொழுமலர் காப்பண் ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று வான்தரு கற்பின் மனையுறை மகளிரின் தான்தனி ஒங்கிய தகைமைய ளன்ருே ஆதிரை கல்லாள்' -15175-79