பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 என உவமை காட்டி அவளை அறிமுகப் படுத்துகின்றர். பின்னும் அவள் தீயிடை நின்றும் அவளை அத் தீ ஒன்றும் செய்யா நிலையில் அதே திருமகள் போன்று அவளும், செந்தாமரை போன்று அத்தீயும் இருப்பதை, "விரைமலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் போன்றினி திருப்ப" -16/33–34 என உவமை காட்டி விளக்குகிறர். பின் தீயிடை இருந்து வெளிவந்த தன்மைக் காட்சியை, "பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று மனங்கவல் பின்றி மனையகம் புகுந்தாள்' 1646-47 என்கின்றர். இவ்வாறு மூன்றுவகை உவமை வழியும் கற்பிற் சிறந்த காரிகையாம் ஆதிரை நல்லாளை நமக்கு அறிமுகப்படுத்துகிருர் சாத்தனர். அத்தகைய ஆதிரையின் கணவன் சாதுவன் கலம் உடைய நாகர் மலையைச் சார்கின்றன். ஆண்டுள்ள குருமகன் கள்ளடு குழிசியும் கடுமுடை நாற்றமும் வெள்ளென்பு உணங்கலும் விரவிய இருக்கையில்’ பேருருவத்தோடு தன் பெண்டுடன் இருந்த காட்சியைக் காண்கின்ருன், அந்தக் குருமகனை, உவமை முகத்தான், காட்டிடை வாழும் கரடியை நினைத்து, "எண்குதன் பிணவோ டிருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி' -16/68–69 எனக் காட்டுகின்றர். சாத்தனருக்கு இந்தச் சாதுவன், ஆதிரை இருவரை நினைக்கும்போது ஏனே உவமைகள் ஒன்றன்பின் ஒன்ருக உருவெடுக்கின்றன. எண்ணிப் பார்ப்பின் இவை இருவர்