பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 தம் பண்பையும் சிறப்பையும் உயர்த்துவனவாக அமை கின்றன. முன்னே கண்ட மூன்று உவமைகளும் ஆதிரை நல்லாளின் அழகையும் திருவையும் பிற நலன்களையும் நமக்கு விளக்குகின்றன. அவற்றுக்கு மேலாக அவளுடைய கற்பின் பொற்பினை நமக்குக் காட்ட அவை பயன்படுத்தப் பெறுகின்றன. அப்படியே குருமகனைக் காட்டும் உவமத்தான் அவன் இழிநிலையினையும் அதே வேளையில் அவனுக்கு அறம் உரைத்துத் திருத்திய சாதுவன் பெருநிலையையும் காட்டுகிருர். அடுத்துக் காட்டும் உவமத்தின் வழியே சாத்தனர் மனைத்தக்களாய் விருந்து புரந்தோம்பும் பண்பினளாய் வாழ்ந்த ஆதிரையின் அருஞ் செயலை உள்ளம் தொடும் வகையில் விளக்குகிரு.ர். தன் அமுதசுரபியில் ஆதிரை நல்லாள் பிச்சை இட வேண்டுமென விரும்புகிருள் மணிமேகலை. ஆயினும் தன் எண்ணத்தை ஆதிரையிடம் அவள் வாய் திறந்து கேட்க வில்லை. குறிப்பறிந்து ஈதலே கொடை என்ற உயர்ந்த பண்பு சாத்தனர் உள்ளத்து உருவாகின்றது. 'இலனென்னும் எவ்வ முரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள' என்ற குறள் வழியே சாதுவனுடைய குலப்பிறப்பாட்டி யாம் ஆதிரை நல்லாள், மணிமேகலை பேசாதிருந்தும் - வேண்டுமெனக் கேட்காதிருந்தும் - அவளுடைய அமுத சுரபியில் ஆருயிர் மருந்தாகிய சோற்றினை இடுகிருள். அங்கே மணிமேகலை நின்ற நிலையைத்தான் சாத்தனர், 'புனையா ஒவியம் போல நிற்றலும்' -16/131 என்ற உவமை காட்டிப் பேசாதிருப்பது மட்டுமின்றித் தேவைக்குரிய ஒருவகைக் குறிப்பும் காட்டா ஒவிய நிலையில் ஆதிரை பிச்சையிட்ட சிறப்பை விளக்குகிருர், ஆம்! குறிப்பறிந்தோ, இல்லை என்று கேட்பதன் முன்போ