பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பிறப்பாட்டியை பல்வேறு உவமைகளில் காட்டிய சாத்தனர், இக் கணிகையர் குலம் காட்டவும் சில உவமைகளைக் கையாளுகின்றர். "காதலன் வீயக் கடுந்துய ரெய்தி போதல் செய்யா உயிரொடும் புலந்து நளியிரும் பொய் ைஆடுநர் போல முளிஎரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த பத்தினிப் பெண்டி ரல்லேம், பலர்தம் கைத்துண் வாழ்க்கைக் கடவிய மன்றே! பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினேம் அன்றியும் நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் வினை ஒழி காலைத் திருவின் செல்வி அனேயேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்' -18/11-22 என்று நான்கு உவமைகளைக் கபட்டுகின்ருர். இந்நான்கின. லும் கணிகையர் இயல்பினை மட்டுமன்றி உலகுக்கு வேண்டும் பல்வேறு உண்மைகளையும் உணர்த்துகிரு.ர். சற்று முன்னே ஆதிரை நல்லாளைக் காட்டிய ஆசிரியர் அவர் உயர்ந்த தன்மைக்கு நேர்மாறன இழிந்த தன்மை யுடைய இக்குடியைக் காட்ட நினைத்து, ஆதிரை பொய்கை புக்கு நீராடுவாள் போன்றிருந்த நிலையில் விளக்கிய அதே உவமைத் தொடரை இங்கும் காட்டி, அத்தகைய நல்லவர் மரபில் வந்தவர் அல்லர் கணிகையர் என்பதை முதல் உவமை வழி அக்கணிகை குலத்தளாம் சித்திராபதி வாக்காலேயே சொல்ல வைக்கிரு.ர். அடுத்து வருகின்ற உவமைகள் அவர்தம் பண்பினை விளக்குவன. யாழ், வாங்குவார் கைப்பட்டு, அவரவருக்கு ஏற்ற இசையை வழங்குவது போன்று விலைமகளிர் பொருள் வாங்கி, அவ்வாறு தந்தார் கைப்பட்டு அவரவர் பான்மை