பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவற்ருல் நாடும் சமுதாயமும் பெறும் நலக்கேடுகளை விளக்கும் சங்க காலப் புலவர் தம் மரபினும், மாறுபட்ட நிலையினை இக் காப்பியப் பெருந் தெருவிலே காண் கின்ருேம். இக் காப்பியங்கள் எழுந்த காலம் கடைச்சங்க மெல்லாம் முற்ற முடிந்துவிட்ட காலம். அக்காலத்தே தமிழ்நாட்டில் வேற்று நாட்டவர் வளரத் தொடங்கிவிட் டனர். பெளத்தமும், சைனமும் வடநாட்டிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறின. அவைகளுக்கு முன்பாகவே வைதிக சமயம் என்னும் வடவாரியர்தம் சமயம் தமிழ்நாட்டில் புகுந்து மக்களிடையில் பரவிற்று. இவைகளுக்கிடையில் 'ஆசிவகம் என்ற சமயமும் நுழைந்தது என்ருலும் அது கால்கொள்ளவில்லை. மேலைநாட்டுக் கிறித்தவ, முகம்மதிய சமயங்களும் அக்காலத்தில் கடல்வழியாகத் தமிழ்நாட் டில் புகுந்தன. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற நெறியிலே வாழ்ந்த தமிழ்நாட்டில் பல சமயங்கள் புகுந்தன. அரசியல் படையெடுப்புகளுக்கு இடனில்லா வகையில் தண்டமிழ் நாடாண்ட முடிமன்னர் மூவரும் சிறக்க ஆண்டமையின், வேற்று நாட்டு அரசியல் நெறி யும் அரசநிலையும் தமிழ்நாட்டில் கால் வைக்க வில்லையா யினும்,சமயப் படையெடுப்பு ஒன்றன்பின் ஒன்ருக நிகழ்ந் துள்ளன. ஆரியர் சிந்து கங்கைச் சமவெளியில் வாழ்ந்த காலத்துத் தம்முடையதுடன், அங்கே வாழ்ந்த திராவிடர் தம் சமய நெறிகளையும் பிறவற்றையும் கூட்டி இணைத்த ஒன்ருகிய வைதிக சமயத்தினைத் தெற்றேயும் பரவச் செய் தனர். 'உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் உடைய வேத வேள்வி முதலியவை தமிழ்நாட்டில் புகுந்தன. வடக்கே இந்தக் கொள்கையை மாற்றும் நிலையில் தோன்றிய பெளத்தமும் சைனமும் அங்கே அச்சமய வளர்ச்சியைத் தகைந்ததோடு தெற்கே தமிழகத்திலும் அவ் வைதிக சமயத்துக்கு மாருகவும் போட்டியாகவும் புகுந்து வேத வேள்வியையும் உயிர்க் கொலையையும் கண்டித்தன. எனவே, கடைச்சங்க காலத்து இறுதியில் வடநாட்டுப் பெருஞ்சமயங்களாக இருந்த இந்த மூன்றும் தமிழ்நாட் டிலும் புகுந்து மக்களிடையே தத்தம் செல்வாக்கை