பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 இந்த ஒரு இடமட்டுமன்றி வள்ளுவர் குறளைப் பலவிடங் களில் சாத்தனர் எடுத்தாளுகின்றர். - சான்ருேர் வழித் தோன்றும் குற்றம் உலகில் யாவருக் கும் நன்கு புலப்படும். வெள்ளைச் சுவர்மேல் சிறு கரும் புள்ளி படினும் அப்படியே காட்டும் நிலையில் இப்ப்ெரி யோர் தம் குற்றமும் உலகோர் கண்களுக்கு நன்கு புலப் படும். உயர்நிலையில் உள்ள மதியினிடத்துக் காணும் மறு உலகெங்கணும் நன்கு தெரிவது போல, உயர்நிலையிலுள்ள இச்சான்ருேர் குற்றமும் யாவருக்கும் தெரியும். எனவே நல்ல குடியில் பிறந்தவர் குற்றம் புரிய அஞ்சி ஒதுங்கி வாழ்வார் என்ற உண்மையை வள்ளுவர் தம் குடிமை என்னும் அதிகாரத்தில் எடுத்துக் காட்டுகின்ருர், "குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து' -குறள் 957 என்பது குறள். இக்குறளைச் சாத்தனர் நாம் முன்னரே கண்ட வகையில் உவமை முகத்தான் அப்படியே எடுத் தாளுகின்ருர். சக்கரவாளக் கோட்டத்தில் நிலவொடு கூடிய இரவுப் பொழுது வந்துற்ற நிலையினை, 'அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்ருேர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல' –6/1-4 என்கின்ருர். வள்ளுவர் கூறிய உவமத்தையும் பொருளையும் ஈண்டுச் சாத்தனர் மாற்றியமைத்துள்ளார். குடிமையை விளக்க வந்த காரணத்தால் ஆண்டு வள்ளுவர் மதிக்கண் மறுவினை உவமையாக எடுத்துக் காட்டுகிறர். ஆனல் இங்கே சாத்தனர் சந்திரன் தோற்றத்தைக் காட்ட வந்தமை யின் உவமை நிலையை மாற்றிவிடுகிறர். சான்ருேர் கண்ட