பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 'மனத்துக்கண் மாசில ளுதல் அனைத்தறன் ஆகுல நீர பிற' -குறள் 34 எனக் காட்டுகிறர். இக் குறட்பா சாத்தனர் உள்ளத்தைத் தொடுகிறது, இவர் பல்வேறு அறங்களை வற்புறுத்துகின் ருர், அவற்றுளெல்லாம் மேலாக உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று உணவிடும் அறமே அனைத் திலும் உயர்ந்தது எனவும் காட்டுகின்றர். ஆயினும் அவற் றினுக்கெல்லாம் மேலாக மணிமேகலை மனத்துக்கண் மாசற்று இருக்க வேண்டிய உண்மையை அறவண வடி கள் வழியே எடுத்துக்காட்டிவிடுகின் ருர், மணிமேகலையின் எதிர்காலம் பற்றியெல்லாம் அறிவுறுத்தும் அடிகளார் பல வகையில் அறம் வளர் நிலைகாட்டி இறுதியாக, "வாய்வதாக கின் மனப்பாட்டு அறம்' –21/171 எனச் சுட்டுகின்ருர், ஆகவே அவள் ஆற்றும் செயல்கள் யாவும் மனத்துக்கண் மாசிலாத மனப்பாட்டு அறமாக இயங்க வேண்டும் எனச் சுட்டுகிறர்.மேலும் அந்த மனப் பாட்டு அறமே மணிமேகலையை அந்தப் பிறவியில் மட்டு மன்றி அடுத்து வரும் பிறவிகளிலும் உயரச் செய்து, இறு தியில் பிறர்க்கறம் அருளும் பெரியோன் தனக்குத் தலைச் சாவகனகும் தகுதியைக் தரும் என விளக்குகிரு.ர். துறவு நிலையை வற்புறுத்துகின்ற சாத்தனர் காதல் இன் பத்தின் சிறப்பையும் காட்டத் தவறவில்லை. அக்கா தல் வாழ்வில் சிறக்கும் இல்லற வாழ்வின் ஏற்றத்தைக் காட்டவே ஆதிரையைப் பற்றிக் கூறி, சாத்தனர் துறவியா கிய மணிமேகலையால் செய்ய இயலாத பெருஞ்செயலைபெருகப் பெருகச் சோறு வளர்க்கும் செயலை-அந்த ஆதிரை நல்லாள் கையால் சோறிட்டுச் செய்ய வைக்கின் ருர். மேலும் பல பாத்திரங்களைச் சிறந்த இல்லறத்தாரா கவே சாத்தனர் காட்டுகின் ருர். துறவு நிலை கூறும் நூலாயி னும், மணிமேகலையினை ஆழ்ந்து நோக்கின் நலம் சான்ற