பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 லுகின்றர். ஒன்றினை மட்டும் இங்கே சுட்டின் சாலும் என எண்ணுகிறேன். பத்து வகை குற்றங்கள்-மனம், மொழி, மெய்களால் வரும் குற்றங்கள்-இவை இவை எனக் காட்டும் வள்ளு வர் அவை அனைத்தையும் அப்படி அப்படியே குறள் அதி காரங்களின் தலைப்பைக்கொண்டே காட்டுகின்ருர்,தீவினை யாதென விளக்கிய விடத்துச் சாத்தனர் பத்து வகையாக அவற்றைக் காட்டுகின்றர். அவர் வாக்கினை அப்படியே மேலே கண்டோம். கொலை, களவு, காமம் என்ற உடலில் தோன்றும் மூன்றும், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றும் நான்கும், வெஃகல், வெகுளல், பொல்லாக் காட்சி என்ற மனத்தில் தோன்றும் மூன்றும் சாத்தனர் காட்டியவை. இந்தப் பத்துக் குற்றங் களையும் வள்ளுவர் எண்ணி எண்ணி அதிகாரங்களாகவும் குறட்பாக்களாகவும் வடித்துத் தந்துள்ளமை அறிவோம். எனவே சாத்தனர் தம் நூலினை வள்ளுவர் ஒளியுடன் நடத் திச் செல்லுகிருர் என்பது தேற்றம். சாத்தனரும் பிறரும் புறநானூற்று அடிகளிலும் சிலவற்றை சாத்தனர் எடுத்துக் காட்டியுள்ளார். 'தாயில் தூவாக் குழவி போல ஒவாது கூஉம்கின் உடற்றியோர் நாடே' -புறம் 4 என்ற புறப்பாடல் அடிகளைச் சாத்தனர், ஆபுத்திரளுகிய புண்ணியராசன் அந்நாட்டை ஆளாது துறவுநிலை மேற் கொள்ளின் அந்நாடு வாடும் என்ற உண்மையை விளக் கும் போது, "நீஒழி காலை நின்ன டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம்' –25/110-111 என்று அமைச்சன் வாயிலாகக் காட்டுகின்ருர்,