பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 "நறுந்தா துண்டு நயனில் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்" -18119-20 என்ற சாத்தனர் அடிகளைப் பெருங்கதை ஆசிரியர், "இளம்பல செல்வர் வளந்தய வாங்கி நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும் மென் சிறை வண்டின மான' -பெருங்கதை 1, 35/137-8 எனக் காட்டுவர். கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர், சாத்தனரின் 'ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்" -6/77 என்ற ஒரே அடிக்கு விளக்கமாக, 'நீண்ட பலி பீடத்தில் அரிந்துவைத்த நெடுங்குஞ்சி சிரத்தைத் தன்கிண மென்றெண்ணி ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்குமாலோ’ -கோயில் 16 என்று அழகுபட எழுதுகின்றர். இவ்வாறே பல பிற்கால நூலாசிரியர்களும் எண்ணற்ற உரையாசிரியர்களும் சாத்த ஞரின் அடிகளைப் பொன்னேபோல் போற்றி எடுத்தாண்ட சிறப்பே இதன் இலக்கியச் சிறப்பினை நன்கு விளக்கும். மணிமேகலையினை அச்சிட்ட ஐயர் அவர்கள் தம் நூலின் இறுதியில், இந்நூலின் அடிகளை எடுத்தாண்ட அடியார்க்கு நல்லார், நச்சினர்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்களையும் பிறரையும் குறித்து அவர்கள் எடுத்தாண்ட பகுதிகளையெல்லாம் தொகுத்துத் தந்துள்ளனர். அப்படியே நூலாசிரியர்களின் மேற்கோள் களைத் தொகுப்பின் அது ஒரு பெருநூலாகவே விரியும். இவ்வாறு பின்வந்த பெரும் நூலாசிரியர்களுக்கும் உரை யாசிரியர்களுக்கும் மணிமேகலை ஒளிவிளக்காக அமைந்து உயர விளங்குகின்றதென்பது தேற்றம்!