பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 வெண்பலி சாந்தம் மெய்ம்முழு துரீஇ பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு அழுஉம் விழுஉம் அரற்றும் கூஉம் தொழுஉம் உழுவும் சுழலலும் சுழலும் ஒடலும் ஒடும் ஒருசிறை ஒதுங்கி டேலும் நீடும் நிழலொடு மறலும் மையல் உற்ற மகன்பின் வருந்தி கையறு துன்பம் கண்டு கிற்குநரும்” –3/104-115 என்று பித்தனின் தன்மைகளையெல்லாம் கூறி, அவனைக் கண்டு அவன்பின் வருந்தும் மக்களின் அவல நிலையையும் சுட்டுகிருர் சாத்தனர். இதில் இன்னொரு கொடு விதையை யும் சாத்தனர் தூவுகிறர். மேலே தமிழ்நாட்டுக்குப் புதிதாக வந்த சைனசமயத்தையும் அதன் துறவிகளையும் வெளிப் படையாகவே கண்டித்த சாத்தனர், தமிழ் நாட்டுக்கே உரிய பழஞ்சமயமாகிய சைவத்தை அத்துணை வெளிப் படையாகக் கண்டிக்க முடியாத நிலையில் தட்டுத் தடுமாறி சிலேடை வகையில் இவ்வாறு சைவர்களைக் கண்டிக்கிருர் எனக்கொள்ளலாம். வெள்ளெருக்கும் அலரியும் சாம்பலும் எலும்பும் (குச்சிகள்) சூடிய சிவபெருமான், பித்தகைவும் அடியார்களால் அக்காலத்திலேயே போற்றப்பெற்ருன் போலும். அச்சமயத்தை நேர்முகமாகக் கண்டிக்க இயலாத சாத்தனர், எலும்புக்குப் பதில் குச்சிகளைக் கூறி, வெள்ளெருக்கும் சாம்பலும் கூறி, சிலேடை வகையால் காட்டுகிறர். அச் சமயத்தைப் பின்பற்றுவோரும் இருக் கின்ற நிலையை ஈற்றடியால் சுட்டி, பித்தனின் அவல நிலையைக் காட்டுவது போன்று, வழிவழியாக வந்த தமிழர் தம் மெய்ச் சமயத்தின் நிலையைக் காட்டி விடுகிருர் சாத்தனர். இவ்வாறு மாறுபட்டு நின்ற தன்மையின் நிலையே, அடுத்த இரண்டு மூன்று நூற்றண்டுகளில் தமிழ் நாட்டில் சமயவாழ்வும் சமுதாயவாழ்வும் சீர்கெட, வரலாறே அறியா வகையில் மங்க, ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் சைவமும் வைணவமும் வைதிகமும் கலந்த