பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:41 மாறுபடுவார் பேடியர் என்றும் கூறி மக்கள் இல்லற வாழ்வில் இயைந்து நிற்க வேண்டிய உண்மையையும் விளக்குகிறர். சாத்தனர் மற்ருெரு காட்சியையும் நமக்குக் காட்டு கிருர். பாரதக் கதை அவர் உள்ளத்தில் படுகின்றது. மணிமேகலையைத் தெருவழியே செல்வதைக் காணும் மக்களை விராட நகர மக்களோடு ஒன்றுபடுத்துகிரு.ர். அர்ச்சுனனும் பேடியை விராட நகர மக்கள் வேடிக்கைக் காண்பதை ஈண்டு நகையாகக் காட்டி, அப்படியே பூம்புகார் நகர மக்கள் மணிமேகலையைக் கண்டு பேசு கிருர்கள் எனக் குறிக்கின்றர். இதில் உள்ள உவமையில் மற்ருெரு பேருண்மையையும் புதைத்து வைக்கிருர் சாத்தனர். ஆம்! பேடி உருவத்தோடு செல்லுகின்ற விசயன் செல்லும் இடத்தில் மாற்ருரைப் புறங்கண்டு திரும்பும்போது தன் பண்டைய உருவத்தோடு திரும்பு கிருன். இதே நிலையில்தான் அன்று புகார்த் தெருவோடு செல்லும் மணிமேகலை அடுத்து அத்தெருவழியே திரும்பும் போது (ஏழுநாள் கழித்து-மணிபல்லவத்திலிருந்து) தன் அகப்பகை புறப்பகை அனைத்தையும் வென்று அலையா உள்ளத்தோடு தன் பண்டைப் பிறவியின் உணர்ச்சி யொடு திரும்புவாள் என்ற உண்மையையும் குறித் துள்ளார். இவ்வாறே பலவிடங்களில் வரும் நகையும் அவலமும் மேலுக்கு வேடிக்கை வாய்ந்தனவாகத் தெரி யினும் உயர்ந்த பொருள்கள் அவற்றின் உள்ளே பொதிந் திருப்பதைக் காணலாம். சாதுவன், குருமகனைக் காணும்போது நடைபெறும் உரையாடல்களும் மணிமேகலை மணிபல்லவத்தில் பெறும் அனுபவங்களும், அவள் அத்தீவில் புண்ணியராசனுக்கு உணர்த்தும் அறவுரைகளும்- அவற்றுள் ஒரு சில வேடிக்கையாகவும் நகைச்சுவை பொருத்தியனவாகவும் அமையினும்-உயர்ந்த பொருள்களையும் வாழ்க்கை நெறிக்கு வேண்டிய மெய்ப்பொருள் விளக்கங்களையும்