பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கொண்டனவாக உள்ளன. இவ்வாறே மன்னனிடம் முனிவர்கள் அவன் மகன் கொலையுண்டமையைக் கூறும் போதும், கந்திற்பாவையும் பிறவும் பேசும்போதும் பற்பல உயர்ந்த கருத்துக்களை அமைக்கின்ருர் சாத்தனர். இக் கதையில் பலதிருப்பங்கள் கந்திற்பாவைகள் பேச்சுக்களா லேயே உண்டாகின்றன. உதாரணமாக, வெட்டுண்ட உதயகுமரனிடம் சென்ற மணிமேகலையைக் கந்திற்பாவை காரணங்காட்டித் தடுத்திராவிட்டால் கதை எவ்வாறு சென்றிருக்குமென்று யாரால் கூறமுடியும்? பாவையும் பேசும் மனிதர் தம் பேச்சைக் கேட்காவிட்டால், பெரியோர் மரத்தையும் பிறவற்றையும் விளித்து அறங்காட்டும் மரபு தமிழ் நாட்டிற்குப் பழமையானது. அப்படியே மனிதர் வாயால் சொல்லும் அறத்தை ஏற்காவிட்டால் மரமும் விலங்கும் பிறவும் சொல்லுவனபோன்று அறத்தை அமைப்பதும் உண்டு; அவற்றைக்காட்டி அறமுரைப்பது முண்டு. 'சொல்லரும் சூற்பசும் பாம்பின்' என்ற தேவர் பாடலும் "தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால்' 'குறைக்குந் தனையும் குளிர்கிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்' என்பன போன்ற பிற்கால ஒளவையார் அடிகளும் இந்த உண்மையை வலியுறுத்துவன. சாத்தனர் இந்த அடிப் படையிலேயோ அன்றித் தெய்வநெறி அடிப்படை யிலேயோ அன்றி இவ்வாறு தூணிற் செதுக்கிய பாவை யினைப்பேசவைத்தால் தம் சமயம் மதிக்கப்படும் என்ற உணர்விலேயோ பலவிடங்களில் பேசவைக்கின்ருர், அப்பாவையுள் ஒன்றுதான் குறட்பாவினை விளக்கிற்று என்று மேலே கண்டோம். மற்றென்று நாம் சற்றுமுன்