பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மணிமேகலா தெய்வம் தோன்றிப் பேசுவதும் மணி பல்லவத்தில் தீவதிலகை பேசுவதும் சம்பாபதி சார்ங்கலன் தாயொடு பேசுவதும் சிந்தாதேவி ஆபுத்திரனுடன் பேசிப் பாத்திரம் அளிப்பதும் காஞ்சனனைக் கந்திற்பாவை தடுப்ப தும், துவதிகன் என்னும் கந்திற்பாவை வருவது உரைப்ப தும் பின் கண்ணகித் தெய்வம் பேசுவதும் இவை போன்ற பிறவும் மணிமேகலைக் காப்பியம் மனிதநிலைக்கு மேம் பட்ட ஒரு தெய்வநிலையை வற்புறுத்துவதோ என்ற உணர்வை உண்டாக்குகிறது. பிற்காலத்தில் உண்டான சமய இலக்கியங்களுக்கும் சமயச் சார்புடைய புராணங் களுக்கும் தல புராணம் போன்றவற்றிற்கும் இந்நூல் வழி காட்டியாக அமைகிறது. இத்தகைய பேசாத தெய்வங்களை யும் சிலைகளையும் பேசவைக்கும் முயற்சி இளங்கோ அடி களால் ஒருசில இடங்களிலும் காட்டப்பெறினும் சாத்த ர்ை அப்பேச்சுக்களையும் செயல்களையும் காப்பியத் திருப்பங்களாகவே அமைத்து உள்ளனர். இம்மரபு புதிய தாயினும் இதில் சாத்தனர் வெற்றி பெற்றுள்ளார் என்றே கொள்ளல் வேண்டும். தன் வெற்றிக்கு அவ்வாறு பேசிய வருள்.ஒரு துணில் நின்ற துவதிகள் வாயிலாகவே சான்றும் காட்டுகின்ருர். இதோ அவர் வாக்கு: "வழு அறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் பேசா என்பது அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியா யாயின் ஆங்கது கேளாய்! முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்ங்ணும் கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமா இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியினும் மன்றமும் பொருந்துபு நாடி காப்புடை மாநகர்க் காவலும் கண்ணி யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து