பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா ஊன்கண்ணி ஞர்கட் குற்றதை உரைக்கும் -21/115.128 இவ்வாறு தன் செயலுக்குச் சாத்தனர் துணைகொள்ளுகிறர். எனினும் பிற்காலத்து வந்தோர் இந்த மரபினையே பெரி தாக்கி மூல மரபினை மூடிய காரணத்தாலேயே தத்தம் காப்பிய விளக்கங்களால் தாம் சிறக்கவில்லை என்பது தெளிவு. விளக்கும் ஆற்றல் சாத்தனர் தாம் கொண்ட கருத்தினைக் கொள்வோர் உளங்கொள விளக்கும் திறம்பெற்றவர் என்பதும் ஈண்டு எண்ணற்பாலதாகும். இவர் ஒவ்வொருவரும் தத்தம் கொள்கையை எவ்வாறு விளக்கவேண்டும் என்ற அடிப் படைக் கருத்தினைச் சமயக் கணக்கர் மேலேற்றி, "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும் சமயக் கணக்கர்' -1/ 10-12 எனக் கூறுகின்றர். இவரே தம் கருத்தினையும் சமய உண்மைகளையும் திறம்பட விளக்கியுள்ளார். ஒருசில வற்றை முன்னரே கண்டோம். ஈண்டும் சில கண்டு அமையலாம். திருவள்ளுவர் 'அழுக்காறு என ஒரு பாவி என்று கொடுமையினும் கொடுமை வாய்ந்த அழுக்காற்றினைச் சபிப்பது போலப் 'பாவி’ எனவே பழித்துரைப்பர். இவ் வளவு நல்லற முரைக்கும் வள்ளுவர் வாயில் இத்தகைய சொல் வரலாமா என்ற எண்ணம் தோற்றினும், அழுக் காற்றின் கொடுமை நிலையினை அவர் எண்ணிக் கூறிய காரணத்தால் அக்கூற்று முற்றும் சரியே எனக் கொள்ளத்