பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தோன்றுகின்றது. அப்படியே சாத்தருைம் ஒரு பாவியை நம்முன் நிறுத்துகின்றர். மணிமேகலை என்ற இந்நூலே உயிர் வாழ்விற்கு இன்றியமையா உணவளிக்கும் அடிப் படையில் அமைந்த காரணத்தால், அவ்வுணவின்றி உருக்கும் பசியினை அவர், "குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடுஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி' -1/76-80 என்று அதன் கொடுமையை அதுவரையில் யாரும் எடுத் துக்காட்டா வகையில் விளக்கிக் காட்டியிருக்கின்ருர். இவர் அடிகளை ஒற்றிப் பின்வந்த ஒளவையார் போன் ருர் பல பாடல்களைப் பாடியுள்ளனர். அடுத்து ஆபுத்திரன் அந்தணர்களின் வேள்வியைக் கடிந்து காட்டும் இடமும் அவன் இந்திரனிடமே தேவ உலக வாழ்வைச் சித்தரிக்கும் இடமும் சாதுவன் நாக நாட்டுக் குருமகனிடம் காமம், கள் முதலியவை கடிய வேண்டும் என்பதை விளக்கும் இடமும் உயிர் மறுபிறப் பெய்துவதைக் காட்டும் இடமும் சிறந்த விளக்கங்களாக -வாதத்தில் வெல்லும் திறத்தனவாக அமைவதைக் காண்கின்ருேம். அவை பற்றியெல்லாம் முன்னரே கண்டுள்ளமையின் தொட்டுச் செல்கின்றேன். மணிமேகலை தன் முந்தைப் பிறப்பின் காதலனுகிய உதயகுமரன் முன்னின்று அறம் உரைத்து அவனைத் திருத்த முயலும்போது கூறிய அடிகள் சாத்தனரின் விளக்குந் திறத்தைக் காட்டுவன. "நல்லாய் என் கொல் நற்றவம் புரிந்தது?" என்று கேட்ட அவனுக்கு, மணி மேகலை இடும்பைக் கொள்கலமாகிய இவ்வுடம்பின் இழி