பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இன்றளவும் வாழ்கின்றன. அவற்றுள்ளும் என்றும் யாவருக்கும் பொதுவான நல்லறம் உணர்த்துவன உலகம் போற்றுமாறு வாழ, ஒருசில தம் உயிர் ஊசலாடும் வகை யில்தாம் வாழ்கின்றன எனலாம். காப்பியத் திருப்பம் சிற்றிலக்கியங்கள் பல தோன்றுவதற்கு முன் பேரிலக் கியங்களும் தோன்றின. அப்பேரிலக்கியப் பெருந்தெரு வில் முதலில் தெரிவன சிலம்பும் மேகலையுமேதாம். சங்க காலச் சமயங் கலவாத, காழ்ப்பினைக் கடியும் வாழ்வினை ஒட்டிய இலக்கியங்களுக்குப் பின் இந்த இரு காப்பியல் களின் தோற்றத்திற்குரிய சூழ்நிலையைக் கண்டோம். இவற்றை இயற்றிய இருவரும் அக்காலத்திய பெரும் புல வர்கள்தாம். எனினும் இந்த இலக்கிய நெறியின் மாற்றத் தைச் செய்ய அவர்கள் பெரிதும் அஞ்சினர்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது. நம் காலத்தைப் போன்று யாரும் எதையும் எழுதி வெளியிடலாம் என்ற பொல்லாப் போக்கு அக்காலத்தில் இல்லை என்று தெரிகின்றது. அவர் தம் கருத்துப் போராட்டத்தை, நூலைப் பற்றிய பதிகம் முத லியவற்ருல் நன்கு அறிந்துகொள்ள முடிகின்றது. இயல் பான தொகை நூல்களாகிய சங்க இலக்கிய நெறியிலி ருந்து மாறிய பத்துப்பாட்டில் அத்துணைப் பெருமாற்ற மில்லை; ஆனால், இக்காப்பிய நெறி முற்றிலும் மாறுபட்ட தாகி விட்டமையின் இவற்றை இயற்றிய இருவருமே அஞ் சினர் என அறிகிருேம். -- செங்குட்டுவன் மலைவளங் காணச்சென்ற காலை அவ னுடன் அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளாம் செம்மை நலஞ்சான்ற புலவரும் உடனிருந்தனர். அவைக் களப் புலவர் பிறரும் இருந்திருப்பர். அவருடன் மதுரை எரிய, அங்கிருந்து வந்த சாத்தனரும் இருந்தனர் என அறிகிருேம். மலைவாழ் வேடுவர் கண்ணகி தன் கண ளுெடு விண்ணிழி விமானமேறிச் சென்றதைக் கண்ட