பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 இலக்கியங்களுக்கும் தல புராணங்களுக்கும் ஊற்ருய் அமைந்தனவாகத் தோன்றுகின்றன. பூம்புகாரின் ஒரு பகுதி சம்பாதிவன மெனவும் மற் ருெரு பகுதி கவேர வனம் எனவும் பெயர் பெற்றமைக்கும் (காதை 3) கதைகள் உள்ளன. பிரத்தியுமனன் வாணுசுரனு டைய நகர் முன் ஆடிய பேடிக் கோலமும், அர்ச்சுனன் விராட நகரத்துப் பேடிக்கோலமும் குறிக்கப்பெறுகின்றன. கெளசிக முனிவன் நாயூனினைத் தின்றன் என்ற கதையும் காட்டப் பெறுகின்றது. (காதை 11) பதின்மூன்ருவது காதையிலேதான் நாம் முன்னே கண்டபடி ஆபுத்திரன் வாயிலாகப் பல ஆரிய முனிவர்தம் பிறப்பினை விளக்கும் வேடிக்கையான கதைகள் காட்டப்பெறுகின்றன. இவை வடநாட்டார் சமயம் மட்டுமின்றி அவர்தம் கதைகளும் தமிழ்நாட்டில் பெருகிவிட்டன என்பதற்குச் சான்று களாகும். உதயணன் கதையும் (காதை 15), அகலிகைக் கதை யும் (காதை 18), வாமனுவதாரக் கதையும் (காதை 19), பரசுராமன் கதையும் (காதை 22) மனுச் சோழன் கதையும் (காதை 22) பிற கதைகளும் பேசப்பெறுகின்றன. இவை யன்றி இன்னும் எத்தனையோ கதைகள் அவ்வப்போது உவமை வகைகளாலும் பிறவகைகளாலும் எடுத்துக்காட் டப்பெறுகின்றன. வெற்றுக் கதைகள் எதுவும் விரவாது, வாழ்வையே படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியங் களைப் பயிலும் நிலையில் உள்ளவர்களுக்கு, இக்கதைகள் அச்சங்க காலத்தை அடுத்தே தமிழ்நாட்டில் பேரிலக்கி யங்களிலும் மக்கள் வாழ்விடங்களிலும் இடம் பெற்றன என்பதைக் காணும்போது, வேற்று நாட்டிலேயிருந்து வந்த வேற்றுச் சமயத்தவராகிய வைதிகர், சைனர், பெளத் தர் ஆகியோர் தத்தம் கொள்கைகளைப் போட்டிகளுக் கிடையில் எத்தனை வேகமாகப் பரப்பியுள்ளனர்-அல்லது பரப்ப முயன்றனர் என்று எண்ணத் தோன்றும். அவற் றுள்-அவ்வாறு வந்த சமயங்களுள் வைதிக சமயம், தான்