பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சமயநெறி ! தமிழர்கள் அதுவரையில் வாழ்க்கையின் அறநெறி யாகக் கொண்டவற்றைச் சாத்தனர் தம் சமயத்துள் ஏற்றிக் கூறுகின்றர். வள்ளுவரை ஒப்பிட்டுக் காட்டிய போது அந்த உண்மையை ஒரளவு உணர்ந்து கொண் டோம். மேலும் நூல் முழுவதும் சமய அடிப்படையில் அமைந்த காரணத்தாலே, பல்வேறு வகையில் ஆராய்ந்த போதும், அங்காங்கே அறத்தொடு கலந்த சமயநெறியும் ஒன்றியிருக்கக் கண்டோம், எனவே, ஈண்டுத் தனியாக அத்துறையில் ஆராயத் தேவையில்லை யாயினும் சாத்தனர் பிறசமயவாதிகளையும் மணிமேகலையையும் முன்னிறுத்திப் பேசும் நிலையிலும் பிற வகையிலும் காட்டியுள்ள ஒரு சில கருத்துக்களை மட்டும் காணல் நலம். தொடக்கத்திலும் இன்றும் மணிமேகலை காலத்திய நாட்டுச் சமய நிலையை ஒருவாறு முன்னரே ஆராய்ந் தோம். அக் காலத்தில் சற்றே வளர்ச்சி அடைய, பிறவற் றைத் பின் தள்ளியதோ என நினைக்கும் வகையில் தம் சமய உயர்வைச் சாத்தனர் கூறினாலும் அக்காலத்தில் தமிழ்நாட்டில் எல்லாச் சமயங்களும் இருந்தன எனக் காண்கின்ருேம். சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை இறுதியில் ஐவகைச் சமயம் அறிந்தனள்' எனச் சாத்தனர் கூறுகின்றனர். ஆயினும் பத்துச் சம யங் களை ப் பற்றிக் கூறியுள்ளமையை நாம் நூல்வழியே அறிகின்ருேம். எனினும் இதற்குத் தக்க விளக்கத்தை ஐயர் அவர்கள் காட்டுவது கொண்டு அறியின் ஐயம் நீங்கும். "இக்காதையிற் கூறியவை பத்து மதங்களாயிருப்ப இங்கே 'ஐவகைச் சமயம்' என்றது இழுக்கன்ருே வெனின்:அளவை வாதம் முதலிய ஐந்தும் ஒருவகையினும் ஆசீவக வாதம் நிகண்ட வாதம் இரண்டும் ஒருவகையினும் அடங்கு மென்ப வாகலின் அன்றென்க'