பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சமயங்களே தம்முள் மாறுபட்டு நன்று வழக்காடுவதை யும் பிற்காலத்தமைந்த பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டும் நன்கு உணரலாம். எனினும் பிற்காலத்தில் இவையனைத்தும் ஒன்ருக இணைந்து இந்துமதம்' என்ற பெயராலே அழைக்கப்பெற்று வாழ்கின்றமையும் கண் கூடு. இச்சமயங்களுள் பிற்காலத்தில் அவ்வப்போது தோன்றி வாழ்ந்த பாசுபதம், கபாலம் போன்ற சிறு சிறு சமயக் கொள்கைகள் சாத்தனர் காலத்தே இல்லை எனக் காண்கின்ருேம். சைவம், வைணவம், வேதாந்தம் (பிரமம்), வைதிகம் என்ற நான்கும், தனித்தனிக் கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் கொண்டு இன்றும் வாழ்ந்து வருவதை அறிகிருேம். அளவை வாதம் நாட்டில் வழக் கொழிந்ததென எண்ண வேண்டியுள்ளது. நிகண்ட வாதம் சைனம்' என்னும் பெயரால் தமிழ்நாட்டில் ஒரள விலும், வடநாட்டில் பல பகுதிகளிலும் வாழ்வதறிவோம். பெளத்தம் தமிழ் நாட்டிலும் பிறந்த வட நாட்டிலும் அதிகமாகப் பரவாவிடினும் பிற நாடுகளில் சிறக்க வாழ். கின்றமை அறிவோம். பிரம வாதமும் வேத வாதமும் ஒன்ருே என்ற வகையில் உள்ளன. ஆசிவகம் நிகண் டத்துள் அடங்கிவிட்டது. மற்றென்ருகிய பூத வாதமே. உலகாயதமாக ஓரளவு இன்றும் வாழ்கின்றது. நாத்திகம் என்னும் மாற்றுப் பெயரால் அது வாழ்கின்றதெனினும் அதுவும் ஒரு பொருளை - உலகினை - சார்ந்து வாழ்கின் றமையின் அதையும் சமயமெனவே கொள்ளுகின்றனர். இச்சமயத்தினைச் சமயமெனச் சாத்தனர் கூறினர் ஆயினும் இதை மணிமேகலை ஏற்றுக் கொள்ளாது மறுத்ததாகவே காட்டுகின்றனர். பிற சமயத்தவர் கொள்கைகளையெல் லாம் கேட்டு ஒன்றும் கூருது வாளா இருந்த மணிமேகலை இக் கொள்கையினை மட்டும் எதிர்த்துத் தன் வாழ்வையே. சான்ருகக் காட்டி மறுத்து ஒதுக்குவதைக் காண்கிருேம். பிற சமயங்களையெல்லாம் மறுத்துக் கூருத மணிமேகலை பூதவாதியை மறுக்கும் திறனைச் சாத்தனர்,