பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 புத்த சமயத்து அடிப்படைக் கொள்கை அறமே. எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாப் பெருநிலையே யாண்டும் பேசப் பெறுகின்றது. சாத்தனர் தம் நூல் முழுவதிலும் மன மொழி மெய்களால் வரும் குற்றங்களையெல்லாம் விளக்கி, அவற்றை நீக்கி உயிர் நலம் பேணும் உண்டி கொடுத்தல் முதலிய அறங்களை ஆற்ற வேண்டுமெனவே வற்புறுத்துவ தறிகிருேம். பேதைமை முதலாக வினையின் பயன் ஈருகப் பலப்பல வகையாகச் சொல்லப் படுகின்ற பன்னிரெண்டு தத்துவங்களையும் மணிமேகலையின் இறுதிக் காதையில் சாத்தனர் விளக்கி (30/104-133) அவற்றினின் றும் விடுதலை பெறுநிலையினைக் காட்டித் தம் சமய உண் மையை நிறுவுகிருர். முன்பும், பேதமை செய்கை உணர்வே அருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர் அறியா ராயின் ஆழ்கர கறிகுவர்" –24/105-110 என்று அறவண அடிகள் அரசிக்குக் கூறுமுகத்தான் சாத் தனர் காட்டுவர். எனவே தன் சமயநெறியை இந்த அடிப் படையில் விளக்கி இறுதியில் உலக துன்பங்கள் அனைத் துக்கும், 'யாம்மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கம் காரணம்' –30/252-253 என்று காட்டி, அவற்றின் நீங்கி ஞான ஒளி பெற்று வாழ் தலே சமயத்தின் முடிந்த முடிவு எனத்திட்டமாகக் காட்டி, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற வரலாற்றை முடிக்கின் ருர் சாத்தனர். திரு. எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்தம் நூலின் முன்னுரையில் காட்டியவாறு பிற்காலத்தில் நாகார்ச்கன. 1.Manimekalai in its historical settings.