பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 ரால் போற்றப்பெற்ற பெளத்த சமயச் சூனியவாதம் சாத்த ர்ை காலத்தில் தமிழ்நாட்டில் கால்கொள்ளவில்லை என் பது தேற்றம். இவ்வாதம் மகாயான மரபைச் சார்ந்து பின் வளர்ந்த ஒன்று எனக் கொள்ளவேண்டும். இந்த மரபும் தமிழர் நெறிக்கு மாறுபட்டதாகும். புத்தர் தம் பிடக நெறி யிலும் (காதை 30) இத்தகைய நெறி பேசப்பெறவில்லை என்பதும் அறியக் கிடக்கின்றது. ஒருவேளை பின் அக் கொள்கையோடு பெளத்தம் தமிழ்நாட்டில் வளர நினைத்த மைதான் அதன் வீழ்ச்சிக்குக் காரணமோ என நினைக்க வேண்டியுள்ளது, இனி. புத்த சமயத்து அடிப்படைகளாகிய மூன்று உண்மைகளையும் (புத்தம், தர்மம், சங்கம்) சாத்தனர் தம் முடைய இறுதிக் காதைகளில் விளக்கிச் செல்லுகின்றர். மேலும் உயிர்கள் மக்கள் கதி, தேவ கதி, பிரம கதி என்ற மூவகைப்பட்ட வேறு வேறு பிறவி நிலைகளில் அதனதன் வினைவழியே பிறக்கும் என்பதையும் வற்புறுத்துகின்ருர், அவ்வவ்விடத்தும் அவரவர் முன்னைப் பிறவியில் ஈட்டிய வினையின் பயன்களையே துய்ப்பர் எனக் காட்டுவர் சாத்த ஞர். மாருக விலங்கும் பேயுமாகித் தீவினையின் வலத்தால் அந்தப் பிறவிகளில் துன்பத்தை உயிர்கள் அடையும் நிலையையும் காட்டுகின்ருர். "மக்களுந் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயு மென்றே கல்வினை தீவினை என்றிரு வகையால் சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்' –30/57-60 என்றும், 'சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கிச் சீலம் தாங்கித் தானந் தலைகின்று மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பயின் உண்குவர்" –30/77-81