பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 என்றும் காட்டி, இருவேறு வகைப்பட்ட-புண்ணிய பாவங்களின் இடைப்பட்ட பிறவிகளைச் சுட்டுவர் சாத்த னர், இவை யாவும் பத்துவகைக் குற்றத்திலுைம், ஐவ கைச் சீலத்திலுைம் அமைந்து பாவபுண்ணிய நெறிகளின் நின்று, உயிர்களைச் செலுத்தும் எனக் காட்டுவர். இவை அனைத்துமே மேன்மேலும் பிறத்தற்கு ஏதுகள் எனவே காட்டிப் பிறவாப் பெருநெறி பெற்று இறைநிலையுறுதற்கு அடிப்படை இவை அனைத்தையும் துறத்தலே என்றும், அனைத்துக்கும் காரணமாகிய காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றையும் கட்டறுத்துப் பற்றும் செற்றமும் முற்றும் நீங்கப் பெற்று, மயக்கம் கடிந்து மனத்திருள் நீங்கப் பெறுதலே என்றும் பிறவாப் பெருநெறியில்ஞான ஒளியிற் றிகழும் வழியென்றும் காட்டிச் சாத்தனர் தம் நூலை முடிக்கிருர். நாமும் இந்த அளவில் அவர் காட் டிய சமய நெறி பற்றி நிறுத்தி,இட்டபணியினையும் முடிக்க முயல்வோமாக! இவ்வாருகச் சாத்தனர் அக்காலத்திய தமிழ்நாட்டு நிலையறிந்து பல்வேறு மாறுபட்ட கொள்கைகள் புகத் தொடங்கிய காலத்தில்,தன் சமயக் கொள்கையைப் பரப்ப வேண்டுமென்ற முயற்சியில் மணிமேகலையைநமக்குத் தந் துள்ளார். எனினும் வெறும் சமய உண்மையை மட்டும் கூருது தமிழ் நாட்டிலே பிறந்த ஒரு பெருஞ் செல்வியைத் தலைவியாகக் கொண்டே,மக்கள் வாழ்வின் அறங்களையே தம் சமய நெறிகளாக மாற்றி அவற்றினைப் போற்றிய காரணத்தாலும், இலக்கிய வளம் செறியப் பாடினமையா லும் மணிமேகலை இன்றளவும் நம்மிடை வாழ்கின்றது. தமிழ்நாட்டுப் பெண்மைக்கே ஒர் ஒளிவிளக்காகவன்ருே மணிமேகலை விளங்குகிருள்! ‘மணிமேகலை, காப்பியத்தின் தலைவியாக மட்டும் அல்லாமல் நாட்டு வரலாற்றின் பெருமைக்குரிய ஒரு பெண் பிறவியாகவும் பலரு டைய உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டாள்' என்று டாக்டர் மு. வ. அவர்கள் தம் தமிழ் இலக்கிய வர