பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 லாற்றில் கூறியபடி மணிமேகலை என்னும் தமிழ்ச் செல் வியை வாழவைக்கச் சாத்தனர் உதவியதோடு, அதே பாத் திரத்தின் பெருமையால் தன் காப்பியமும் என்றும் வாழ வழி செய்து கொண்டார். புத்த சமயம் பற்றியே, பாலி மொழியன்றிப் பிற எந்த மொழியிலும் அச்சமய நெறி எழுதப்படாததற்கு முன்பு, முதல் முதல் தமிழ்மொழி யிலேயே சாத்தனர் தம் காவியத்தை எழுதினர் என்று திரு. கனகசபைப் பிள்ளை அவர்கள் எழுதியாங்கு, ! அந்த அடிப்படையிலும் சாத்தனரும் மணிமேகலையும் என்றும் வாழ்வதறிகிருேம். எவ்வாறயினும் இலக்கியத்திலும் சமயத்திலும் அந்த இரண்டாம் நூற்றண்டுக்கு இடையில் பெரும் புரட்சி செய்து இரண்டையும் வாழவைக்க நினைந்த சாத்தனர் தம் காப்பியத்தை இலக்கியமாகஎழுதினர் எனக் கொள்வதுடன், அதில் முழு வெற்றிபெற்றவர், சமய நெறியில் வெற்றி பெற்றரா என்பதில் ஐயமுடைய தெனவும் கொள்ளவேண்டியுள்ளது. நாம் இவற்றின் எல்லையெல்லாம் கடந்து, அன்னைத் தமிழுக்கு அழகிய அணியாகத் தம் காப்பியத்தைச் செய்து, அதன் வழி அக் காலத்துத் தமிழகத்தை உலகுக்கு உணர்த்தித் தமிழையும் தமிழ்நாட்டையும் போற்றி, வளர்த்து, வாழவைத்த சாத்தனரின் தொண்டினை என்றென்றும் போற்றக் கடமை பட்டிருக்கிருேம். என்றும் நிலைத்து வாழும் பெரும் காப்பியம் செய்த இப்புலவர் பெருமாகிைய கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனர் என்றென்றும் வாழ்வ. ரெனவும் அவர் இலக்கியம் மக்கள் வாழ்வுக்கு ஒளி விளக்காக விளங்கி வழிகாட்டுமெனவும் நம்பி என் பணியை முடிக்கின்றேன். வாழ்க சாத்தனரின் பெருந் தொண்டு வளர்க மணிமேகலையின் அறமும் நலமும்! 1. சாகித்திய அகாடமி பதிப்பு, பக். 91 2. The Great Twin Epics ... 39.