பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 'உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள, மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்' -சிலப். 87-89 என்ற சிலப்பதிகாரப் பதிக அடிகளும் "மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்" -நூல் கட்டுரை 17,18 என்ற சிலம்பின் நூல் கட்டுரை அடிகளும், "இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமேகலைத் துறவு ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்" -மணி. பதி. 95-98 என்ற மணிமேகலையின் பதிக அடிகளும் நமக்கு உணர்த்துகின்றன வல்லவோ? இவ்வாறு இளங்கோவடிகளும் சாத்தனரும் அதுவரை தமிழ் உலகம் காணுத தமிழ் மரபு உணராத, தமிழ் இலக் கிய நெடுந்தெருவில் பெருந் திருப்பங்கண்டனர். நல்ல வேளை தமிழ் உலகம் அத்திருப்பங்கண்ட இலக்கியமாம் அவற்றை ஏற்றுக்கொண்டதோடு அந்தத் திருப்பத்தி லேயே செல்லவும் தொடங்கிற்று. பிற்காலத்தில் பல காப் பியங்கள் எழுவதற்கும், காப்பிய இலக்கணங்கள் அமை வதற்கும் இப் பெருங்காப்பியங்கள் இரண்டும் துணையாக வும் வழிகாட்டிகளாகவும் விளங்கின என்பது தேற்றம். சாத்தனர் சாத்தனர் என்ற பெயர் அக்காலத்தில் தமிழ்நாட்டில் பரவலாக வழங்கிவந்திருக்கவேண்டும். மணிமேகலை என் னும் நூலின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனர்