பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 என வழங்கப்பெறுகிறர். சிலர் கூலவாணிகன் சாத்தனர், சீத்தலைச்சாத்தனரின் வேறுபட்டவர் எனக் கூறுவர். இவர் களை யன்றி சாத்தனர்' என்றே ஒரு புலவர் சங்கப் புலவ ராக இருந்து பாட்டிசைத்துள்ளார் (குறுந் 349). பிற்காலத் தில் சாத்தன், சாத்தனர் போன்ற பெயர்கள் பொதுமக்களி டத்தில் மிகச் சாதாரணமாகக் காணப்பெறுகின்றன. பிற் காலத்தில் இலக்கண நூல்களில் மேற்கோள் காட்டும் பெயர்களுள், சாத்தன்' என்ற பெயர் பலவிடங்களில் எடுத்தாளப் பெறுகின்றது, சாத்தன் என்பதுதான் ‘சாஸ்தா'வாக இருக்கவேண்டும் என்பது சிலர் கருத்து. சைனரா? பெளத்தரா? - சாத்தன் அல்லது சாத்தனர் என்பது வடமொழிப் பெயர். 'சாஸ்தா என்பதன் திரிபு என்பர். இதை அப் படியே உண்மை என்று கொள்வாரும் உளர். சாத்து’ என்பதன் அடியாகச் சாத்தன், சாத்தனர் என்ற பெயர் வந்திருக்கவேண்டும் என்று கருதுவாரும் உளர். 'சாற்று' சாத்து ஆயிற்றென்பர் சிலர். 'சாத்து என்பதே வணிகர் கூட்டத்துப் பெயர் என்றும் இவர் வாணிகரானமையின் சா த் த ைரா னு ர் எ ன் று ம் சி ல ர் கூ று வ ர். மணிமேகலையை ஆங் கி ல த் தி ல் மொழிபெயர்த்த போப் அவர்கள் சாத்தனர் என்பது சைனப் பெயர் என் றும் இவர் புத்தர் சிறப்பினைப் பாடும் மேகலையை இயற் றினர் என்றும் வைதிகம் நாட்டில் கால்கொண்டிருந்த தென்றும் இப்புதுச் சமயங்களுள் எதைக் கொள்வதென மக்கள் அக்காலத்தில் தயங்கி நின்ருர்களென்றும் தன் முன்னுரையின் அடிக்குறிப்பில் காட்டியுள்ளார். சாஸ்தா' என்பது புத்தருடைய பெயரே என்று அமரகோசம்' முதலிய வடமொழி நிகண்டு முதலியவற்றை மேற்கோள் காட்டுவர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். இங்கே மற்றெருவர் கூற்றும் நினைவுக்கு வருகிறது. மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பஞ்சாப