பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மேகலை ஆசிரியர் அவரினும் வேறுபட்டவர் என்பர் சிலர். அவர் கூற்றுக்கு ஏற்ப, இப்பாடல்களின் தமிழ்நடையும் போக்கும் மணிமேகலை அடிகளுக்கும் அமைப்புக்கும் ஒரளவு மாறுபட்டுள்ளமையைக் காண முடிகின்றது. எனி னும் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய அவரே, பொது மக்களுக்கெனக் கதைபொதி பாட்டாகிய மணிமேகஜல: யைப் பிற்காலத்தில் பாடினர் என்று கொள்ளவேண்டும் என்பர் சிலர். இவ்விருவரேயன்றி மற்ருெரு சாத்தருைம் சங்கப் பாடல் பாடியுள்ளார். திருவள்ளுவர் பெருமையைப் பாராட்டிக் கூறும் மருத் துவன் தாமோதரனரின் திருவள்ளுவ மாலைப் பாடல் "வள்ளுவர் முப்பாலால், தலைக்குத்து தீர்வு சாத்தற்கு என்று கூறுவதால் இவரைப் பற்றி ஒரு கதை வழங்குகின்றது. சங் கத்தில் அரங்கேற்றப்பெறும் நூல்களில் பிழை கண்ட விடத்து அவற்றை மறுத்தற்கு அஞ்சி, அவற்றைக் கேட்க நேர்ந்தமைக்கு வருந்தித் தம் தலையிலேயே தமது எழுத் தானியால் குத்திக் கொள்வார் என்றும் அதல்ை இவர் தலையில் சீழ் வடிய, இவர் 'சீத்தலைச் சாத்தனர். ஆயின; என்றும் கூறுவர். இவர் கூற்றுக்கு ஏற்பப் பிற்கால உரை யாசிரியர்களாகிய இளம்பூரணர் போன்றவர்கள் இயற் பெயர் சினைப்பெயர்’ (தொல். பெயர். சூ. 20) என்பதற்கு மேற்கோளாக இச் சீத்தலைச் சாத்தன்' என்ற தொடரைக் காட்டுகின்றனர். எனினும் இதற்குத் தக்க ஆதாரமின்மை யானும், சீத்த்லை என்பது ஊரின் பெயராக ஆய்ந்து கண் டமையாலும் இப் புலவர் சீத்தலை என்ற ஊரைச்சார்ந்த சாத்தனர் என்றே கொள்ளலாம். சீத்தலைச் சாத்தனரும் கூலவாணிகன் சாத்தருைம் ஒரு வரோ இருவரோ என்ற ஆய்வு இன்னும் முற்றுப் பெரு நிலையில் மற்ருெரு ஐயப்பாடும் நாட்டில் உள்ளது. சிலம்பு மேகலை இரண்டும் இணைந்த இரு பெருங்காப்பியங்களாக உள்ள நிலையில் ஒரே காலத்தன எனக் கொள்வதிலும்