பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிலர் ஐயமுறுகின்றனர். சாத்தனரின் மணிமேகலை காலத் தால் பிந்தியதாக இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து. அதற்கேற்ற நிலையில் இரு இலக்கியங்களிலும் நடை, பொருள்நில்ை, பிறவற்றில் மாறுபாடு இருப்பதைக் காண்கின்ருேம். சிலப்பதிகார நடையிலும் எளிய நடைய தாய் அதுவரையில் தமிழ்நாட்டில் கேட்டறியாத பல பெயர்களையும் கொள்கைகளையும் பேசுவதாலும் கதை கள் பலவற்றைக் காட்டுவதாலும், சமயத்துக்கு முக்கியம் தருவதாலும் அக்கருத்து உண்மையோ என எண்ண் வேண்டியுள்ளது. எனினும் சிலப்பதிகாரம் நடந்த ஒரு வரலாற்று அடிப்படையில் உலகில் என்றும் நின்று நிலவும் மூன்று உண்மைகளை நிலைநாட்ட எழுந்தமையால், அது புலவரால் போற்றப்பெறும் உயர்ந்த நடையையே தழு விச் செல்கிறது. சாத்தனர் தம் சமயத்தை மணிமேகலை. வரலாறு காட்டி வளர்க்க நினைத்தமையானும், சமய உண்மைகளும் கதைகளும் கற்ருர் மட்டுமின்றிப் பாமர மக்களும் உணரவேண்டும் என எண்ணினமையானும் அவர் எளிய நடையினைக் கையாண்டு பல சமயக் கதை களையும் எடுத்தாண்டார் எனக் கொள்ளல் பொருந்துவ தாகும். ஆகவே இளங்கோவடிகள் சாத்தனர் இருவரும் ஒரே காலத்தில் இருந்தவர்களே என்பதும் ஒருவர் கேட்ப மற்றவர் தம் காப்பியத்தை இயற்றினர் என்பதும் தேற்ற மாகக் கொள்ளவேண்டுவன என்பது தெளிவு. இனி, சீத்தலைச் சாத்தனரே கூலவாணிகன் சாத்தனர் என்று கூறுவார் கூற்றினை மறுக்கப் போதிய சான்றுகள் இல்லை. மொழிவகையில் மாற்றம் இருப்பதற்குக் காரணம் மணிமேகலை பாமர மக்களுக்குச் சமயம் வளர்க்கப் பயன் பட எழுதியதேயாகும். மேலும் சங்ககாலப் புலவர் தாம் மதுரையில் இருந்ததற்குச் சான்ருகத் தம் ஒரே புறப் பாடலைப் பாண்டியனைப் பற்றியதாகவே யாத்துள்ளார். பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைச் சீத் தலைச் சாத்தனர் பாடிய பூவைநிலைப் பாடலே புறம்