பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. 59-ஆவது பாடலாக அமைந்துள்ளது. சிலம்பின் வழியே கூலவாணிகன் சாத்தனர் மதுரையில் இருந்தது, மதுரை எரியத் தாம் வெள்ளியம்பலத்தில் தங்கியது, அதுகால் கண்ணகி, கோவலன் வரலாறு முதலியன கேட்டது ஆகி யவையும் தெரிகின்றன. எனவே, மொழி அமைப்பின் அடிப்படை ஒன்றைக் கொண்டே இருவரும் வேறுபட் டவர் எனக் கொள்வதை விடுத்து, வேறு தக்க சான்றுகள் காணும் வரையில், இருவரும் ஒருவரே எனக் கொள்ளல் பொருந்தும். இக் கருத்தினை இன்றைக்கு அரை நூற்ருண் டுக்கு முன் மணிமேகலையைப் பற்றி ஆாரய்ந்த திரு. கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் உறுதியாகக் கூறியுள் ளார்கள். காலம் சாத்தனர் நெடுங்காலம் வாழ்ந்தவராதல் வேண்டும்ஒட்டக்கூத்தர், பரணர், உருத்திரங்கண்ணனர் போன்ற பெரும்புலவர்களை ஒப்பச் சாததருைம் நெடுங்காலம் வாழ்ந்தவராதல் வேண்டும். கண்ணகி மதுரைக்குச் சென்ற காலத்தில் கடைச்சங்கம் இருப்பதாகக் குறிப்பு இல்லை. ஊர் காண் காதையில் மதுரைச் சிறப்பனைத்தை யும் கோவலனை முன்னிறுத்திக் காட்டிய இளங்கோவடி கள் அக்காலத்தில் தமிழ்ச்சங்கம் இருந்திருப்பின் அதைக் காட்டாமல் இரார். கடைச்சங்கம் அழிவுற்றபின் அச் சங்கத்தில் வாழ்ந்த பல புலவர்கள் பின் சிலம்பு மேகலை தோன்றிய காலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். அவ ருள் ஒருவரே சாத்தனராவார். அகநானூற்றிலும் புறநானூற்றிலும் திருவள்ளுவ மாலையிலும் இவருடைய செய்யுட்களும் மருத்துவன் தாமோதரனர் செய்யுட்களும் அடுத்தடுத்துக் காணப் ப்ெறுதலாலும் தாமோதரனர் இவரைப்பற்றிக் கூறியிருத்த லாலும் இருவரும் நெருங்கிய நட்பினரெனக் கருத இட முண்டு என டாக்டர் ஐயர் அவர்கள் தம் முன்னுரையில் 2