பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 குறித்துள்ளனர். எனவே, சங்கப் புலவராக இவர் இருந்த வர் என்பது தெரிகிறது. பிற புலவர்களோடு சங்கத்திருந்து தமிழாய்ந்து, சங்கம் கலைந்த பின்பும் பாண்டியன் அவை யில் பெரும் புலவராய்த் திகழ்ந்து, கண்ணகியின் வாழ் வியலைக் கண்ணிற் கண்டு, பின் வஞ்சி சென்று இளங்கோ வடிகளின் நண்பராய் வாழ்ந்தார் இவர் என்று கொள்ளல் பொருந்தும். இவருடைய வாய்மை வழுவாப் பண்புநெறி, இவர் புறப்பாடலில் மன்னன் அப்பண்பாட்டாளன் எனத் காட்டுவதிலிருந்தே தெளிவாகும். மேலும் இவர் மன்னன் பால் பெற்ற தண்ணளி அவனைத் திங்களுக்கு ஒப்பிடுவ தால் புலனுகும். . 'ஆரந் தாழ்ந்த அணிகிளர் மார்பின் தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி வல்லை மன்ற நீநயந் தளித்தல் தேற்ருய் பெரும பொய்யே என்றும் காய்சினக் தவிராது கடலூர்பு எழுதரும் ஞாயி றனையைகின் பகைவர்க்குத் திங்க ளனையை எம்ம ைேர்க்கே" என்ற இவர் பாடல் பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பற்றியதாகும். இப் பாண்டியன் நெடுஞ் செழியனுக்கு முன்னரோ அல்லது அவன் காலத்திலேயோ பாண்டிய நாட்டின் ஒரு பகுதியிலே வாழ்ந்தவனதல் வேண்டும். எனினும் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒப்பற்ற மன்னகை வாழ்ந்தமையின் அவன் காலத்தில் பாண்டிய நாட்டில் இருவேறு அரசர் இருந்தார் எனக் கொள்ள இடமில்லை. எனவே மூன்று தலைமுறை அளவில் சாத்தனர் வாழ்ந்ததாகக் கொள்ளல் பொருந்துவதாகும். இனி, சாத்தனர் மணிமேகலை எழுதிய காலத்தை ஒருவாறு எண்ணிப் பார்க்கலாம். மணிமேகலையில் பல் வேறு சமயங்களையும் சமய நூற்களையும் பற்றிய குறிப்புக் கள்.வருகின்றமையின் அது காலத்தால் பிந்தியது என்பது