பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஒன்பது அகத்திணைப் பாடல்களில் ஐந்திணைகளைப் பற்றி யும் பாடியுள்ளார். அகநானூற்றில் பாலைத் திணையில் இரு பாடல்களும் (59, 229) முல்லைத் திணையில் ஒரு பாடலும் (134) மருதத் திணையில் ஒரு பாடலும் (320) பாடியுள்ளார். குறுந்தொகைப் பாடல் (154) பாலைத் திணையைச் சார்ந்தது. நற்றிணையில் உள்ள மூன்றில் இரண்டு குறிஞ்சி (36,331) ஒன்று நெய்தல் (127) திணைகளைச் சார்ந்தவை. இவற்றுள் அகப்பொருள் சிறப்பு மிளிர்ந்து ஒளிர்வதைக் காணலாம். இவற்றுள் தமிழ்நாட்டு மன்னரைப் பற்றிய குறிப்போ வேறு தலைவர்கள் பற்றிய குறிப்போ நேராகவோ உவம வாயிலாகவோ ஒன்றும் இல்லை; முழுக்க முழுக்க அகம் பற்றிய கருத்துக்களே கொண்டுள்ளன. இவையன்றி மேலே கண்ட புறப் பாடலில் சாத்தனர் தாம் பாண்டியல்ை பெற்ற தண்ணளியைப் பாராட்டிப் பேசுகின்ருர். தாம் மட்டுமன்றித் தம்மை ஒத்த புலவர்களை யும் மற்றவரையும் "எம்மனேர் எனச் சேர்த்து அவர்கட்கு அவன் திங்களனைய'கை இருக்கிறன் எனக் காட்டுகிறர். எனவே, இவர் தம் கால அறிஞருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததோடன்றி அரசலுைம் நன்கு மதிக்கப் பெற்றிருந்தார் என்பது தேற்றம். திருவள்ளுவ மாலை சீத்தலைச் சாத்தனரால் பாடப்பெற்றதாக வரும் திரு வள்ளுவ மாலையில் உள்ள வெண்பா, தமிழ்நாட்டு மூவேந்தரையும் இணைக்கின்ற பாவாக அமைகின்றது. 'முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது, அடிகள் நீரே அருள்க’ என இளங்கோவடிகளைச் சாத்தனர் கூறிச் சிலம்பினைப் பாட வைத்தார் என்ற செய்தியை அதன் பதிகத்தால் அறியும் நாம் இவ்வெண்பாவைப் படிக்கும் போது, இருவரும் ஒருவரே என்ற உணர்ச்சியைப் பெறுகின்ருேம்.