பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. டிருந்த விதத்தையும் அதன் பல்வேறு தன்மைகளையும் சுட்டிக்காட்டுகிறர்.' * , மணிமேகலை சங்க இலக்கியங்களை ஒத்த தமிழ் நூல் என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது. பின்வந்த சீவகசிந்தா மணி, இராமாயணம் போன்ற பல இலக்கியங்கள் மொழி பெயர்ப்பு நூல்களாக அமையச் சிலம்பும், மேகலையும் முழுக்க முழுக்க முதல் தமிழ் நூல்களாகவே அமைவ தோடு, அவை இரண்டுமே தமிழ்நாட்டிற்கு வந்த வேற்றுச் சமயங்களை விளக்கும் முதல் நூல்களாகவும் அமைந்து விட்டன. மேலும் இவை இரண்டும் பிற பேரிலக்கியங்கள் போலாது, கதைகள் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஆசிரியர் களாலேயே எழுதப்பெற்றமையின் வெறும் கற்பனை களுக்கு இடமின்றியும் அமைகின்றன. மணிமேகலைக்குப் பழங்காலத்தில் ‘மணிமேகலைத் துறவு என்ற பெயரே இருந்ததென்பதனை நீலகேசி உரை யாலும் சிவஞான சித்தியாரின் பரபக்கத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.” ஏன் சிறக்கவில்லை இலக்கியம் சமுதாய வாழ்வைக் காட்டும் கண்ணுடி என்பதைக் கண்டோம். எனவே சமுதாயச் சூழல்களை விளக்கும் ஒன்ருக இலக்கியம் அமைவதோடு, அந்தச் துழல் அடிப்படையைக் கொண்டு, இலக்கியம் என்றும் வாழும் மக்கட் சமுதாயத்துக்கு நிலைத்த உண்மைகளை உணர்த்துவதாகவும் அமையவேண்டும். மணிமேகலையில் அறநெறி, கொல்லாமை, கற்பு போன்ற வாழ்க்கைநெறி கள் நன்கு காட்டப்பெறுகின்றனவேனும், அவற்றுக் கெல்லாம் மேலாக, அது ஒரு சமயத்தின் பெருமையை விளக்கும் நூலாக அமைந்துவிட்டது. அதிலும் தம் 1. The great Twin Epics, pp. 39 & 40 (Foot notes}. 2. டாக்டர் உ. வே. சா. பதிப்பு, முன்னுரை 13.