பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கொள்கையைக் காட்டி, அதுவே தன் சமயநெறி எனக் கூறிற்று. எனவே, தமிழர் அம் மதத்தை நன்கு பற்றிக் கொண்டனர். பின் வளர்ந்த வேதாந்த சமயம் முதலியன வும் அந்த நிலையிலேயே தமிழ்நாட்டில் நிலைநிற்க முயன்றும், கொள்கை அடிப்படையிலே மாறுபட்ட மையின் இங்கே நிலைபெற்று வாழ முடியவில்லை. இவற்றுக் கிடையில் சில தமிழ் உள்ளம் படைத்த சைன, பெளத்தப் பெரியவர்கள் எழுதிய தத்தம் சமய உண்மைகளை விளக்கும் ஒரு சில நூல்கள் மட்டும், அவற்றின் இலக்கிய வளம் முதலியவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டில் நிலைத்து, இன்றளவும் வாழ்கின்ற நிலைபேற்றினைப் பெற்று விட்டன. அவற்றுள் சைனர் தம் சிந்தாமணியும் பெளத்தர் தம் மணிகேகலையும் சிறந்தனவன்றே! கதை வரலாறு மணிமேகலையின் கதை நாடறிந்த ஒன்று. எனினும் அதைச் சுருங்கிய அளவிலாவது சொல்லுவது என் கடமை யாகும். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் மணி மேகலை. அவள் எப்போது பிறந்தாள் என்பதை, கோவலன் மாதவியை விட்டுப் பிரியும் வரையிலும் நமக்குக் காட்டவில்லை எனினும், பிறகு இளங்கோவடிகள் அக்குழந்தை பிறந்ததையும் அதன் பெயர் மணிமேகலை என அமைந்த காரணத்தையும் சொல்லிவிடுகிறர். கோவலன் கொலையுண்ட காலத்தில் மணிமேகலை தக்க பருவம் பெற்றவளாகவே இருக்க வேண்டும் எனத் தெரிகிறது. கோவலன் கொலையுண்டதைக் கேட்ட மாதவி தான் மட்டுமன்றித் தன் மகள் மணிமேகலையையும் துறவில் செலுத்தினுள் என்பதையும் அறிகிருேம் . ஆயினும் மணிமேகலை மணிமேகலா தெய்வத்தால் தன் பெயருடைய தீவுக்கு எடுத்துச் செல்லப்படும் முன் அவள் துறவியாயினுள் என்பதற்குச் சான்று இல்லை. மேலும் விழாவறை காதையில் மாதவி தன் மகளைத் துறவிடைப் படுத்தப்போகின்ற நிலையினை,