பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. 'மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்த லல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள்' -2/55-57 எனக் கூறுவதிலிருந்து, பாட்டியாகிய சித்திராபதி, மணி மேகலையை இந்திர விழாவுக்கு அழைத்துத் தம் தொழிற் படுத்த விரும்புவதையும், மாதவி மறுத்துரைப்பதையும் காண்கிருேம். பிறகு, மணிமேகலை சுதமதி இருவரும் மலர் கொய்யச் சோலை செல்ல, அங்கு உதயகுமரனின் தோற்றத் தால் அஞ்சி இரவில் தங்க, மணிமேகலா தெய்வம் அவ்விரவில் உறங்கிய மணிமேகலையைத் தூக்கிச் சென்றது என அறிகிருேம். எனவே மாதவி தான் துறவி ஆன உடனேயே மகளையும் துறவியாக்கவில்லை என்று தெரிகிறது. எனினும் கோவலன் மறைந்தபின் குறைந்து மூன்று ஆண்டுகளுக்குள் மணிமேகலை துறவு எய்தினுள் என்பது தேற்றம். இந்திர விழாவில் எழுந்த கானல் வரிக்குப்பின் பிரிந்த கோவலன் மறைந்த அடுத்த இந்திர விழாவோ, அன்றி அதற்கடுத்த விழாவோதான் மணிமேகலையில் மூதற் காதையில் விழாவாகக் காட்டப்பெறுவது எனக் கொள்ளல் வேண்டும். கோவலன் கொலையுண்டமைக்கும் கண்ணகி விழா எடுப்பதற்கும் இடையில் மூன்ருண்டுகள் கழிந்திருக்கவேண்டும் எனக் காண்கின்ருேம். மதுரை யிலிருந்து புறப்பட்ட கண்ணகி 14 நாட்கள் நடந்து சேரர் தம் அகநாடு சென்று இறைநிலையுற்ருள் என்பதும் உடனே செங்குட்டுவன் அவள் சிறப்பறிந்து இமயம் நோக்கிக் கல் எடுக்கச் சென்றன் என்பதும், அவ்வாறு சென்றவன் செயல்முடித்துத் திரும்புமுன் முப்பத்திரண்டு திங்கள் கழிந்தன என்பதைக் கங்கைக் கரையில் 'எண்ணுன்கு திங்கள் நீங்கியது' என்று கணி உணர்த் தின்ை என்பதும் நாம் அறிந்தவை. செங்குட்டுவன் திரும்பி வந்ததும் விழா நடைபெற்றது. திரும்புவதற்கும் விழா ஏற்பாட்டுக்கும் 3 திங்கள் எனக் கொண்டால்