பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 மொத்தம் 36 திங்கள் அல்லது மூன்ருண்டுகள் ஆகின்றன. அந்த விழாவிற்கு வந்த அடித்தோழி, "மாதவிதன் துறவும் கேட்டாயோ தோழி மணிமேகலைத் துறவும் கேட்டாயோ தோழி" - சிலம்பு 29.7 என்று அரற்றுகிருள். அதைக் கேட்ட செங்குட்டுவன் தேவந்தியை நோக்கி, "வாய்எடுத்து அரற்றிய மணிமே கலையார்? யாது.அவள் துறத்தற்கு ஏது? ஈங்குரை' - சிலம்பு 30/4.5 எனக் கேட்க, தேவந்தி மணிமேகலை மாதவியால் துறவி யாக்கப் பெற்ற தன்மையை எடுத்து உரைக்கிருள். சிலம்பின் இறுதிக் காதையில் இவ்வாறு அறிமுகம் செய்யப்பெற்ற மணிமேகலையே மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்' என்ற தொடருக்கு இயைய, அடுத்த பெருங் காப்பியத்தின் தலைவியாகின் ருள். இதன் வழி மற்றென்றும் தெரிகின்றது. அன்று ஆண்ட செங்குட்டுவனுக்கும், நம்மைப்போல் அதுவரை மணிமேகலை யார்?' என்பதுகூடத் தெரியா திருக்கின்றது. மதுரைக்கு எல்லையில் நின்று மாடலன் வழியே மணிமேகலையின் பிறப்பையும் பெயரையும் நமக்கு உணர்த்திய இளங்கோவடிகள், தம் இறுதிக் காதையில்தான் அவள் துறவு எய்தியதனையும் காட்டு கின்றர். 'யாது அவள் துறத்தற்கு ஏது?’ என்ற செங்குட்டுவன் வினவிற்குத் தேவந்தி சில அடிகளால் இறுத்த விடையே பின் அருகிருந்த சாத்தனரால் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பெரு நூலாக ஆகப்பெற, இன்று நம்முன் பேசப்பெறும் பொருளாகவும் நிற்கிறது. மணிபல்லவம் சார்தல் இந்திர விழா நடைபெறுவதற்கான முன்னறிவிப்பினை வள்ளுவன் முரசறைய, நாட்டு மக்கள் விழாச்செய்யவிழை