பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கின்றனர். விழாவிற்குச் செய்ய வேண்டுவன இன்னின்ன என்று வள்ளுவ முதுமகன் திட்டமாக விளக்குகிருன். மக்கள் தம் அணிநகரை அழகுசெய்ய முற்படுகின்றனர். மாதவி தனி இடத்தே துறவுக்கோலத்தில் புத்தநெறியைப் பின்பற்றி அமைதியாக இருக்கிருள். எந்த விழா தன் தலைவனைத் தன்னிடமிருந்து பிரித்ததோ, அதே விழா நாள் திரும்பத் திரும்ப வரும்போது அவள் உள்ளம் அனலிடை மெழுகென உருக, வாடிய மேனி யளாய் இருக்கிருள் மாதவி. உடன் மகள் மணிமேகலையும் அவள் துணையாகச் சுதமதியும் உள்ளனர். அந்த வேளையில் சித்திராபதியின் சூழ்ச்சி தலைதுாக்குகிறது. மணிமேகலையைக் குலத் தொழிலுக்கு ஈர்க்க நினைக்கிருள் அவள். அதை வசந்த மாலை வழி மாதவிக்கு உணர்த்துகிருள். அவள் மாதவி யிடம் பேசும்போது, அனைத்தும் அறிந்து கலைநலம் உணர்ந்தவள் - கற்றுத்துறைபோயவள் - நல்தவம் புரிந்தது நாணுடைத்து' என்கிருள். இந்த நிலை மாதவிக்கும் முற்றும் பொருந்தும்; ஆயினும் வசந்தமாலை வந்தது மணிமேகலையைக் கொண்டுசெல்லவே என்பதை உற்றறிந்தவளாய், "காவலன் பேர் ஊர் கனை எரி யூட்டிய மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் r திருத்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள்' –2/54-57 என்கின்ருள். அதற்குமுன் தான் கற்புடைப் பெண்களைப் போ று உயிர் நீங்காது நெருப்பிடை மூழ்காதிருந்த நிலையை எண்ணி எண்ணி ஏங்குகிருள். ஈண்டுச் சாத்தனர் மாதவி குலப்பிறப்பாட்டிற்குரிய குன்ரு ஒழுக்கங்கொண் டவள் என்பதை உலகுக்கு உணர்த்துகிருர். மேலும் சித்திராபதி ஒருவேளை தன்னையே இந்திரா விழாவிற்கு ஈர்க்கும் உள்ளத்தளாய் வசந்தமாலையை அனுப்பியிருப் பினும், தான் மட்டுமன்றித் தன் மகளும் அத் திருந்தாச் செய்கைக்கு அனுப்பப் பெருள் என்பதைத் திட்டமாகக்