பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 காட்டிவிடுகிருள். மேலும் ஈண்டே மாதவி புத்த சமயத் துக்குரிய ஐவகைச் சீலத்தையும் காட்டிப் பிறந்தார் உறும் துன்பத்தை விளக்கி, அதை நீக்கி நலம்பெறத் தான் துறவுகொண்ட-மணிமேகலை கொள்ள இருக்கும் நிலையினை யும் உணர்த்துகிருள். இவற்றைக் கேட்ட சித்திராபதி வாளா இருப்பள்கொல்? - உதயகுமரன் மணிமேகலையின் எழில் உலகம் அறிந்த ஒன்று. அந் நாட்டு மன்னன் மகன் உதயகுமரன், அவளை அடைய ஏங்கி நின்றன். அவனைத் தனக்குச் சாதகமாய்ப் பயன் படுத்த நினைத்த சித்திராபதி அதில் வெற்றியும் பெற்று விட்டாள். அதற்கேற்ப மணிமேகலையும் சுதமதியும் மலர் கொய்ய மலர்வனம் அனுப்பப் பெறுகின்றனர். ஈண்டு ஆசிரியர் பூம்புகாரில் உள்ள பல்வேறு வனங்களையெல் லாம் நமக்குக் காட்டி, அவற்றுள் உவவனம் பாதுகாவ லானது எனவும் அதில் உள்ள பளிக்கறை துன்பம் வரினும் பாதுகாக்க வல்லது எனவும் கூறுகிருர். உண்மை யில் சித்திராபதியால் தூண்டப் பெற்ற உதயகுமரன் மலர் வனம் புக, அவனிடமிருந்த மணிமேகலையை அப்பளிக்கு மண்டபமே காப்பாற்றியதை அறிகிருேம். « 'பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக' என்று ஒளித்தறை தாழ்கோத்து உள்ளகத்து இரீஇ' –4/87–88 வெளியே சுதமதி நிற்க, உதயகுமரன் வந்து, பளிக்கறை புக முடியாது வருந்தித் திரும்புகிறன். அவனுக்கு அற முரைப்பதன் வழியே சுதமதி உடலின் அவலநிலையை உலகுக்கு உணர்த்துகிருள். மாலைப்பொழுது வந்துவிட்டமையின், வழியிடை மன்னகுமரன் தொல்லை தரவும் கூடும் என எண்ணி மணி மேகலையும் சுதமதியும் சக்கரவாளக் கோட்டம் சென்று தங்குகின்றனர். அவ்வாறு செல்லத் தூண்டிய தெய்வம் மணிமேகலா தெய்வமேயாகும். தன் பெயரால் வாழும்