பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சென்றதும் வருவதும் புகாரின் சக்கரவாளக் கோட்டத்தில் உறங்கிய மணி மேகலை, விழித்ததும் புது இடத்தில் இருப்பதறிந்து மயங்கி வருந்தித் தன் தந்தையையும் அன்னையையும் நினைத்துப் புலம்பும்போது எதிரில் புத்த பீடிகை தோன்றுகின்றது. அதைக் கண்டதும், மணிமேகலை தெளிவுபெற்று, அதை வலம் வருகிருள். அது அவளுடைய முன்னைப் பிறப்பினை யும், அப்பிறப்பில் அவள் இலக்குமி என்ற அரசமகளாய்ப் பிறந்து இராகுலன் என்னும் அரச மகனை மணம் செய்து கொண்டு வாழ்ந்த வகையினையும் அறிய வைக்கின்றது. அப் பிறப்பில் பிரமதத்தனை வழிபட, வரும் பிறப்புக்களை அவர் வழி அறிந்ததையும் காட்டுகிறது. அதே வேளையில் மணிமேகலா தெய்வம் அங்குத் தோன்றி, மணிமேகலைக் குப் பல உண்மைகளை உணர்த்துகின்றது. அவள் கணவ னை இராகுலனே--முந்தைப் பிறப்பின் கணவனே-அது காலை உதயகுமரகைப் பிறந்துள்ளான் என்பதையும் அதனலேயே அவள் விரும்பாவிடினும் பளிக்கறையில் அவள் உள்ளம் அவன்பால் சென்றநிலையையும் சுட்டிய தோடு, மாதவி, சுதமதி இருவரும் சென்ற பிறப்பில் அவள் தமக்கையர் என்பதையும் உணர்த்துகிறது. மேலும் அவள் வருங்காலத்துக்குத் துணையாக அமைய, வேற்றுருப் பெறு வதற்கும், விண்வழிப் பறப்பதற்கும், பசியாதிருப்பதற்கு மாக மூன்று மந்திரங்களைச் சொல்லித் தந்து செல்கின்றது. பின் அத் தீவை வலம்வரும் மணிமேகலையைத் தீவ திலகை காண்கிருள். அவள் வழியே ஆபுத்திரனின் அமுத சுரபியைப் பற்றி அறிய, அப்பாத்திரத்தினைப் பெற விழைகிருள் மணிமேகலை. அப்பத்திரம், 'கோமுகி என்னும் கொழுநீ ரிலஞ்சி இருது இளவேளில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவைெடு பொருந்தித் தோன்றும்’-11/39.43