பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 வகையில் சிலவற்றைப் பின்னல் கேட்டு உணரும்படியாக அமைத்து விடுகிருர். அமுதசுரபியைப் பற்றிச் சொல்லிய தீவதிலகை அதன் திறத்தையும் வரலாற்றையும் நின் ஊர் அறவணன் தன்பால் கேட்குவை' என்று விட்டுவிட, அதைக் கேட்டறியவும் பிற உணரவும் புகார் வந்த மணி மேகலை, மாதவி, சுதமதியுடன் அவரை நாடிச் செல்கிருள். அவரை அறிமுகம் செய்கையில், "நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரைமு தாளன்' - —12/3-4 என்று சொல்லி வயதினையும் அதே வேளையில் நடுங்காத தெளிந்த நாவன்மையினையும் குறிக்கிருர் சாத்தனர். மணி மேகலையின் முன்னைப் பிறவி நாளிலும் அறவணர் இருந்த மையின் அவர் வயதானவராக உள்ளனர்; வாழ்க்கை அநுபவம்-சமய உணர்வு-வருவதறியும் தகுதி-உரிய செயலாற்றுந் திறன் அனைத்தும் அவரிடம் உள்ளன. அறவண அடிகள் மாதவி, சுமதி ஆகியோர் பழம்பிறப்பி லும் தான் கொண்ட தொடர்பினைக் காட்டுகிருர். உடன் அடிகள் வழியே, சாத்தனர் புத்த தேவன் தோற்றம், திறன் பிற நிகழ்ச்சிகள் அனைத்தையும் உணர்த்துகிருர். பின் பசிப்பிணி தீர்க்க வேண்டுமெனக் கூறி, அமுதசுரபி பெற்ற ஆபுத்திரன் வரலாற்றைக் கூறுகின்றர். ஆபுத்திரன் வரலாறு ஆபுத்திரன் வரலாற்றைக் கூறும் வகையில் வேத வேள்வி புரியும் வைதிக நெறியைக் கடிந்து கொல்லா அறமே நல்லறம் என்ற தம் சமயக் கொள்கையை வற் புறுத்துகிருர் சாத்தனர். அதே வேளையில் வைதிகர் தம் சாதி வேறுபாட்டுக் கொள்கையை அவர்தம் சமய அடிப் படை காட்டிக் கடிகிருர். மேலும் பசு, நாட்டின் செல்வ மாகி உயிரூட்டும் பண்பினைப் பாராட்டுகிருர். ஆபுத் திரன் சாலியின் மகனுகப் பிறந்து வயனங்கோட்டு அந்தணல்ை வளர்க்கப் பெற்று, வேள்வியைத் தகர்ந்து