பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பின் மாமறை மாக்களால் ஒதுக்கப்பெற்று, மதுரையில் சிந்தாதேவியின் அருளால் அமுத சுரபியைப் பெற்றதைச் சொல்லுகிருர். - 'விடுகில மருங்கில் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சொடு அருள் சிறந் தூட்டும் இதனொடு வந்த செற்றம் என்ளை —13/51-55 என்று பசுவின் ஏற்றத்தையும், ' ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் கரிமக னல்லனே கேச கம்பளன்? இங்கிவர் நும்குலத் திருடி கணங்களென் ருேங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால் ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள்' –13/63–69 என்று பலரும் பிறந்து உயர் ஒழுக்குற்று மறைவிளி பயிற் றிச் சிறந்தார் ஆயினமை காட்டிப், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உண்மையையும் நிலைநாட்டுகிருர், மேலும் சாதியால் மிக்காராகத் தம்மைக் கருதும் அப் பார்ப் பன மாக்களை, 'மாக்கள்’ என்றே சுட்டி, மக்களினத்துக் கீழ்ப்பட்டார் என்பதை நிறுவுகிறர். சாத்தனர் புரட்சிக் கவிஞர் என்பதைக்காட்டப் பின் பல கருத்துக்கள் காணப்போகும் நமக்கு இது ஒர் எடுத்துக்காட்டு என இங்கே அமைகிறேன். ஆபுத்திரன் பாத்திரம் பெற்றதைச் சொல்லிப் பின் அவன் கொடைநலத்தால் இந்திரன் குலைந்ததைக் காட்டி, மாறக, அவன் மழைநலம் பெருக்க விளையுள் மிக தன் அமுதசுரபிக்கு வேலையின்மையின், சாவக நாட்டில் பஞ் சம் என அறிந்து அங்கே செல்லப் புறப்பட்ட ஆ புத்