பக்கம்:சாத்தனார்-சொற்பொழிவுகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 திரன் இடையில் மணிபல்லவத்தில் இறங்கவும் தன்னை விட்டுக் கப்பல் புறப்பட்டபின், அங்கேயே அமுதசுரபி யைப் பொய்கையில் விட்டுத் தான் உண்ணுநோன்பிருந்து உயிர் விட்டதையும், பின் அவன் விரும்பிச் சென்ற சாவக நாட்டிலே ஆ வயிற்றில் பிறந்து, பின் அரசனுகி ஆள்வதை யும் கூறினர். (அவன் மதுரைக்குக் கிழக்கே இருந்த கொற் கைத் துறைமுகத்தில் புறப்பட்டு இலங்கையைச் சுற்றிச் செல்லும் கப்பலில் சென்றிருக்கவேண்டும்.) பின் அமுத சுரபியால் மக்கட்கு உணவிடப் பணித்தனர். பிறகு அந்த அமுதசுரபி அதுபோது வெறுமையாக இருந்தமையின் கற் புடை மாதர் முதலில் அதில் பிச்சை இடின் பிறகு பெருகும் என்றும் அக்கற்புடை மாதராய்ப் பூம்புகாரில் சிறக்க உள்ளவள் ஆதிரையே என்றும் வித்தியாதர நாட்டுக் காய சண்டிகை காட்டி உணர்த்துகிருள். இவள் ஒரு புதிய பாத்திரமாக இங்கே அமைகிருள். பின் மணி மேகலை அவ்வாதிரை நல்லாள் வீட்டில் சென்று 'புனையா ஒவியம் போல நிற்க. 'பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து' (16|134-135) எனக் காட்டுகிருர் சாத்தனர். ஆதிரை ஆதிரையின் வரலாறு கூறுவதன்வழி, அவள் கணவன் சாதுவன் கணிகையொடு வாழ்ந்த வாழ்க்கையும், பின் இழந்த பொருள், ஈட்ட மரக் கலத்துச் சென்றதும், கலம் உடைய அவன் இறந்தானென ஆதிரை தீயிடை மூழ்க அது சுடாது நின்றதும், தன் நிலைக்கு வருந்த அசரீரி சாது வன் இறக்கவில்லை என உணர்த்தியதும், அவள் 'பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று' தீயிடை யிருந்து வந்ததும், அவன் நாகர் தீவில் அங்கே வாழ்ந்த நலமிலார் வாழ்வைத் திருத்தியதும், பின்வந்து மனைவி யோடு வாழ்ந்ததும் எடுத்துக் காட்டுகிறர். நாகர் நாட்டில்